புதிய ஆடி க்யூ7 எஸ்யூவியின் படங்கள் வெளியானது - விபரம்

By Saravana

இரண்டாம் தலைமுறை புதிய ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவியின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நடைபெற உள்ள டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் மாடல் காட்சிக்கு வருகிறது.

இலகுவான அலுமினியம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் முந்தைய மாடலைவிட பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், முந்தைய மாடலைவிட பரிமாணத்திலும், எடையிலும் ஸ்லிம்மாகியிருக்கிறது.


எடை குறைவு

எடை குறைவு

உறுதித்தன்மை வாய்ந்த இலகு எடை கொண்ட அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் தற்போது விற்பனையில் இருந்து வரும் க்யூ7 எஸ்யூவியை விட 325 கிலோ எடை குறைவானது.

 பரிமாணம்

பரிமாணம்

எடையில் மட்டுமின்றி, பரிமாணத்திலும் குறைந்திருக்கிறது புதிய ஆடி க்யூ7 எஸ்யூவி. நீளத்தில் 37மிமீ வரையிலும், அலகத்தில் 15 மிமீ வரையிலும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, கேபின் இடவசதி அதிகரிக்கப்பட்டிருப்பதுதான் இதன் முக்கிய விசேஷம்.

காக்பிட்

காக்பிட்

மூன்றாம் தலைமுறை ஆடி டிடி காரின் காக்பிட் அமைப்பு புதிய ஆடி க்யூ7 எஸ்யூவியின் காக்பிட் டிசைனிலும் பிரதிபலிக்கிறது. பெரிய டச்பேட் கொண்ட புதிய எம்எம்ஐ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கூகுள் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியும் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பம்சம். இதுதவிர, போஸ் சவுண்ட் 3டி சவுண்ட் சிஸ்டம் அல்லது பேங்க் அண்ட் ஒலுஃப்சென் சவுண்ட் சிஸ்டத்தை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஆடி க்யூ7 எஸ்யூவியில் 333 எச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 252 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. டீசல் மாடலில் 272 பிஎச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், 218 பிஎச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் மாடலிலும் வர இருக்கிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இந்த கார் டீசல் ஹைபிரிட் மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடல் 373 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும். கணக்கீடுகளின்படி, இந்த மாடல் 100 கிமீ தூரத்தை வெறும் 1.7 லிட்டர் டீசலில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 இந்திய வருகை

இந்திய வருகை

அடுத்த ஆண்டு 10 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 10 புதிய மாடல்களில் இந்த புதிய க்யூ7 மாடலும் இருக்கலாம் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
German luxury car maker Audi has taken the wraps off the second generation Q7. The Q7 is billed as being the lightest model in its class as it tips the scales at just 1995kg. This makes it approximately 325 kg lighter than its predecessor.
Story first published: Saturday, December 13, 2014, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X