போல்ட் காரை அறிமுகத்தை தாமதப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்!

By Saravana

ஸெஸ்ட் காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததையடுத்து, போல்ட் காரின் அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. வரும் ஜனவரி மாதம் வரை மாதத்திற்கு 5,000 ஸெஸ்ட் கார்களை உற்பத்தி செய்வதற்கு இலக்கு வைத்திருந்தது.

Tata Bolt

வரும் ஜனவரி வரை சப்ளையர்களிடமும் மாதத்திற்கு 5,000 கார்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை சப்ளை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், முதல் மாதத்தில் 3,331 ஸெஸ்ட் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதனால், அதிருப்தியடைந்துள்ள டாடா மோட்டார்ஸ் போல்ட் காரை உடனடியாக களமிறக்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் புதிய போல்ட் காரை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஸெஸ்ட் காருக்கு வரவேற்பு குறைந்து காணப்படுவதற்கு, ஏஎம்டி மாடல் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்னையும், தாமதமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Very low demand for the new Tata Zest sedan, has made Tata, one of India's largest carmakers, delay the launch of the Bolt by about three months to early next year.
Story first published: Saturday, November 1, 2014, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X