போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் புதிய ஜாகுவார் கார்: செப்டம்பரில் ரிலீஸ்!

By Saravana

வரும் செப்டம்பர் 8ந் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜாகுவார் நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் செடான் ரக கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய கார் பென்ஸ் சி கிறாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

அலுமினியம் மோனோகாக் சேஸீயில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் மறுசுழற்சி யுக்தியுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் மாடலாகவும் இருக்கும் என ஜாகுவார் மார் தட்டுகிறது. பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி போன்ற போட்டியாளர்கள் இந்த காரை கண்டு அச்சப்படும் அளவில் இந்த காரில் முக்கிய சிறப்பம்சங்கள் எவை என்பதை ஸ்லைடரில் காணலாம்.


 கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

டாடா மோட்டார்ஸ் கொடுத்த முதலீட்டு உற்சாகத்தில் இந்த புதிய காரை வடிவமைத்து அசத்தியுள்ளது ஜாகுவார் டிசைன் டீம். கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 அலுமினிய கட்டமைப்பு

அலுமினிய கட்டமைப்பு

இந்த கார் அதிக உறுதித்தன்மையும், இலகு எடையுடன் கூடிய புதிய வகை "ஆர்சி- 5754" என்ற கிரேடு கொண்ட அலுமினியத்திலான பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. லும், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யாமல் வடிவமைத்துள்ளதாக ஜாகுவார் தெரிவித்துள்ளது. இந்த காரில் 75 சதவீதம் அலுமினியம் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மறுசுழற்சி

மறுசுழற்சி

இதன் பெரும்பான்மையான பாகங்களை மறுசுழற்சி செய்யும் விதத்தில் கட்டமைக்கும் தொலைநோக்கு திட்டத்துடன் ஜாகுவார் தயாரிப்பில் வரும் முதல் கார் இது. மேலும், இதன் அலாய் வீல் கூட மறுசுழற்சி செய்யக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் தனது கார்களில் பயன்படுத்தப்படும் பாகங்களில் 75 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜாகுவார் இலக்கு வைத்துள்ளது.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரில் இன்ஜினியம் என்ற பெயரிலான புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின்கள் இன்கேனியம் வரிசையில் வருகின்றன. இந்த எஞ்சின்கள் அதிக எரிபொருள் சிக்கனம், சிறப்பான மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் வருகிறது.

 புதிய ஆலையில் உற்பத்தி

புதிய ஆலையில் உற்பத்தி

மேற்கு மிட்லேண்ட் பகுதியில் உள்ள சோலிஹல் ஆலையில் இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மிகச்சிறப்பான கட்டமைப்பு தரத்திலும், ஏராளமான சிறப்பம்சங்களுடன் வருவதாலும் போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செக்மென்ட்டின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் மாடலாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

Most Read Articles
English summary
Jaguar Land Rover brand is owned by Indian automobile giant Tata Motors. The British iconic brand had earlier announced the XE as its new premium sports sedan offering. The vehicle will be showcased globally at London on the eighth of September, 2014.
Story first published: Wednesday, July 30, 2014, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X