நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஹோண்டா அமேஸ்!

By Saravana

கடந்த மாதம் விற்பனையில் ஹோண்டா அமேஸ் காரை ஓரங்கட்டி காலை தூக்கிவிட்டுள்ளது டாடா ஸெஸ்ட் கார். காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது.

மாருதி டிசையர் எட்ட முடியாத இடத்தில் இருந்தாலும், அடுத்தடுத்த இடங்களை பிடிப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. இரண்டாம் இடம் நமக்குத்தான் என்று இருந்த ஹோண்டா அமேஸ் காருக்கு ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் கார்களால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கடந்த மாத விற்பனை நிலவரம் காட்டுவதாக அமைந்துள்ளது.

Tata Zest Car

கடந்த மாதம் 17,950 மாருதி டிசையர்கள் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கடுத்து இரண்டாம் இடத்தில் 4,629 என்ற எண்ணிக்கையுடன் ஹூண்டாய் எக்ஸென்ட் கார் இருக்கிறது. மூன்றாவது இடத்தை டாடா ஸெஸ்ட் பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 3,524 டாடா ஸெஸ்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனால், அமேஸ் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3,482 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கையில் சிறிய வித்தியாசமாக இருந்தாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஸெஸ்ட் காரின் விற்பனை நிச்சயம் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பழைய டாடா மாடல்களைவிட மிகச் சிறப்பான ஃபிட் அண்ட் ஃபினிஷ், ஓட்டுதல் தரம், டிசைன், கையாளுமை என அனைத்திலும் சிறந்ததாக டாடா ஸெஸ்ட் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 The newly launchedTata Zestoutsold the year-old Honda Amaze in October, 2014 sales.
Story first published: Wednesday, November 12, 2014, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X