ஆட்டோரிக்ஷாவைவிட குறைவான கட்டணத்தில் நானோ டாக்சி: பெங்களூரில் அறிமுகம்

By Saravana

ஆட்டோரிக்ஷாவைவிட குறைவான கட்டணத்தில் நானோ கார் டாக்சி சேவை பெங்களூரில் துவங்கப்பட்டிருக்கிறது. டாக்சிஃபார்ஷ்யூர் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டாக்சிஃபார்ஷ்யூர் நிறுவனத்தின் மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


100 கார்கள்

100 கார்கள்

இந்த சேவயில் 100 நானோ கார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக நானோ டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் டாக்சிஃபார்ஷ்யூர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கட்டண விபரம்

கட்டண விபரம்

முதல் 1.9 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோரிக்ஷாவைவிட இது 3 ரூபாய் குறைவாகும். மேலும், முதல் இரண்டு கிலோமீட்டரை தவிர்த்து அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.13 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நைட் ஃபேர் இல்லை

நைட் ஃபேர் இல்லை

இரவு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் டாக்சிஃபார்ஷ்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இரவில் பணி முடிந்து செல்லும் பெண்கள் மற்றும் பணியாளர்களுக்கு பெரிதும் பயன்படும்.

வரவேற்பு

வரவேற்பு

நேற்று மாலை 6 மணிக்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து 52 முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றான சிறப்பான திட்டமாக பய

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

ஆட்டோரிக்ஷாக்களைவிட குறைவான கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான பயணத்தையும் வழங்கும் என்பதால் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 TaxiForSure, one of India's leading aggregator of taxi and car rentals, formally launched their new category of Nano taxis in Bangalore.
Story first published: Friday, December 5, 2014, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X