650 கிமீ ரேஞ்ச் கொண்டதாக மேம்படுத்தப்படும் புதிய தெஸ்லா எலக்ட்ரிக் கார்!

Written By:

ஒருமுறை சார்ஜ் செய்தால், 650 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட புதிய தெஸ்லா ரோட்ஸ்டெர் கார் மேம்படுத்தப்படுகிறது. தெஸ்லா ரோட்ஸ்டெர் 3.0 மாடல் மூன்றுவிதமாக மேம்படுத்தப்படும்.

இந்த காரின் லித்தியம் அயான் பேட்டரியின் திறன் 31 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதன் மூலம் 40 சதவீதம் வரை ரேஞ்ச் அதிகரிக்கப்படுவதுடன், ஆயுட்காலமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

Tesla Roadster
  

இரண்டாவதாக, புதிய ஏரோடைனமிக் கிட் கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலம், காரின் இழுவிசை 15 சதவீதம் வரை குறைக்கப்படும். மூன்றாவதாக, டயர்கள் உருளும்போது ஏற்படும் இழப்பை 20 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான, புதிய வீல் பேரிங்குகளுடன் மேம்படுத்தப்பட்ட வீல்களும், புதிய டயர்களும் பொருத்தப்பட உள்ளது.

அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான தூரத்தை ஒரே சார்ஜில் சென்றடைவதற்கான சோதனை ஓட்டத்தையும் விரைவில் நடத்த இருக்கிறது தெஸ்லா மோட்டார்ஸ்.

English summary
Tesla has announced its new Roadster 3.0 prototype which will improve the car in three ways: improved battery life; a new aerodynamic kit; and a wheel upgrade.
Story first published: Monday, December 29, 2014, 11:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark