கிராஷ் டெஸ்ட் பூச்சாண்டி ஸ்விஃப்ட்டிடம் பலிக்குமா என்ன?!- டாப்- 10 கார்கள்!

தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வந்தும் அக்டோபர் விற்பனை எதிர்பார்த்த படி அமையவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் கார் விற்பனையில் ஓரளவு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதத்தில் கார் விற்பனையில் டாப் -10 இடங்களை பிடித்த மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்,


10. மாருதி செலிரியோ

10. மாருதி செலிரியோ

ஒரு படி கீழே இறங்கி மாருதி செலிரியோ 10வது இடத்தை பிடித்தது. அக்டோபரில் 5,232 செலிரியோ கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 4,926 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனையாகின.

9. மாருதி சியாஸ்

9. மாருதி சியாஸ்

கடந்த மாத விற்பனையில் மாருதி சியாஸ் கார் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. அக்டோபரில் ஹோண்டா சிட்டி உற்பத்தியில் ஏற்பட்ட குளறுபடிகளால், 6,345 கார்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால், கடந்த மாதத்தில் 5,232 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வரும் மாதங்களில் சியாஸ் காரின் விற்பனை ஸ்திரத்தன்மை பெறுமா என்பது ஒரு பக்கம். மறுபக்கம், இதன் நேரடி போட்டியாளரான ஹோண்டா சிட்டி எங்கிருக்கிறது என்பதும் மனதை குடைகிறதல்லவா. ஆனால், சியாஸை ஹோண்டா சிட்டி முந்திவிட்டது.

8. ஹூண்டாய் இயான்

8. ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் நிறுவனத்திற்கு சீரான பங்களிப்பை வழங்கி வரும் இயான் கார் 8வது இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபரில் 6,896 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 6,626 கார்களாக குறைந்தது.

7. ஹோண்டா சிட்டி

7. ஹோண்டா சிட்டி

உற்பத்தி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக விற்பனையில் தடுமாறிய ஹோண்டா சிட்டி, நவம்பரில் மீண்டும் மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் சிம்மானத்தில் ஏறியது. கடந்த அக்டோபரில் 5,120 சிட்டி கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 7,252 சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன. டாப் - 10 பட்டியலில் பத்தாவது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் அக்டோபரை போலேவே நவம்பரிலும் 6வது இடத்தில் இருக்கிறது. கடந்த அக்டோபரில் 8,400 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 8,396 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

5. ஹூண்டாய் எலைட் ஐ20

5. ஹூண்டாய் எலைட் ஐ20

2015ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த காருக்கான விருதை பெற்றிருக்கும் ஹூண்டாய் ஐ20 தனது ஆஸ்தான இடமான 5ல் உள்ளது. தோற்றத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்திருக்கும் இந்த புதிய மாடல் விற்பனையிலும் ஹூண்டாய்க்கு தோள் கொடுத்து வருகிறது. அக்டோபரில் 8,895 கார்கள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 10,552 கார்கள் விற்பனையாகியுள்ளன.

 4 மாருதி டிசையர்

4 மாருதி டிசையர்

அக்டோபரில் இரண்டாவது இடத்தில் இருந்த மாருதி டிசையர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் 16,542 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் வெறும் 12,020 என்ற நிலைக்கு வந்துவிட்டது. டிசையர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் வர இருப்பதாக வெளியான தகவல் டிசையர் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

3. மாருதி வேகன் ஆர்

3. மாருதி வேகன் ஆர்

ஆஸ்தான 4வது இடத்திலிருந்து ஒரு படி முன்னேறி கடந்த இரு மாதங்களாக மூன்றாம் இடத்தில் இருக்கிறது மாருதி வேகன் ஆர் கார். அக்டோபரில் 14,310 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 13,545 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2. மாருதி ஸ்விஃப்ட்

2. மாருதி ஸ்விஃப்ட்

கிராஷ் டெஸ்ட் பூச்சாண்டியெல்லாம் ஸ்விஃப்ட்டிடம் பலிக்கவில்லை. கடந்த அக்டோபரில் 11,965 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 17,900 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வரவும் ஸ்விஃப்ட் விற்பனையில் ஏற்றம் தந்துள்ளது.

1. மாருதி ஆல்ட்டோ

1. மாருதி ஆல்ட்டோ

கண்ணை மூடிக்கொண்டு ஆல்ட்டோ என்று சொல்லிவிடலாம் அல்லவா! கடந்த அக்டோபரில் 21,443 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 24,201 ஆலட்டோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

ஆதிக்கம்

ஆதிக்கம்

டாப் - 10 பட்டியலில் தொடர்ந்து மாருதி, ஹூண்டாய் தயாரிப்புகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாப்- 10 பட்டியலில் 6 மாருதி கார் மாடல்களும், 3 ஹூண்டாய் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. தப்பு முதல் போன்று ஹோண்டா சிட்டி மட்டும் அசங்காமல் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தி வருகிறது.

Most Read Articles
English summary
Inspite of sales being slow, manufacturers did manage to register growth. Let’s take a look at top 10 cars that sold the most in November 2014, compared to October 2014.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X