விரைவில் வரும் புதிய ஹூண்டாய் கார்கள்: ஒரு கண்ணோட்டம்

By Saravana

அடுத்த ஆண்டு மூன்று புதிய கார் மாடல்களை ஹூண்டாய் கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதில், ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய இரண்டு புதிய செக்மென்ட்டுகளிலும் புத்தம் புதிய மாடல்களுடன் கால் பதிக்க உள்ளது.

இதுதவிர்த்து, புதுப்பொலிவுடன் வெர்னா செடான் காரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அடுத்த ஆண்டில் வர இருக்கும் புதிய ஹூண்டாய் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய ஹூண்டாய் கார்கள்

புதிய ஹூண்டாய் கார்கள்

அடுத்த ஆண்டில் மூன்று புதிய கார் மாடல்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது. ஹூண்டாய் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் எலைட் ஐ20 அடிப்படையிலான கிராஸ்ஓவர் மற்றும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஆகியவைதான் அந்த மாடல்கள். அதன் கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 கிராஸ்

ஹூண்டாய் எலைட் ஐ20 கிராஸ்

புதிதாக முளைத்திருக்கும் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் செக்மென்ட்டில் எலைட் ஐ20 கிராஸ் கார் மூலம் கால் பதிக்க இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் புதிய எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலாக மாற்றப்பட்டிருக்கும் இந்த கார் தற்போது தீவிர சோதனைகளில் இருந்து வருகிறது. டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஃபியட் அவென்ச்சுரா, ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருக்கும் அதே எஞ்சின்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது. பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங், புதிய அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களால் வெர்னாவின் விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை போக்கிக் கொள்ளும் விதமாக, புதுப்பொலிவுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

தற்போது இருக்கும் அதே எஞ்சின்களை புதிய மாடலிலும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.புரொஜெக்டர் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள், புதிய பம்பர் மற்றும் கிரில் என முன்புறம் புளுயிடிக் டிசைனில் செதுக்கப்பட்டு கவர்கிறது. எல்இடி விளக்குகளுடன் பிரேக் லைட்டுகள், புதிய ரிஃப்லெக்டர், தாழ்வான பம்பர் ஆகியவை வெர்னாவின் பின்புறத்தை மிக அழகாக காட்டுகிறது. சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருவதால் சிறந்த கையாளுமையை வழங்கும். அடுத்த ஆண்டு மார்ச்சில் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 ஹூண்டாய் எலைட் ஐ20 கிராஸ்

ஹூண்டாய் எலைட் ஐ20 கிராஸ்

வாடிக்கையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புத்தம் புதிய ஹூண்டாய் மாடல் இது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய கார் மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது தீவிர சாலை சோதனைகளில் இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டருக்கு போட்டியாக இருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்தியாவில் ஹூண்டாய் வெர்னா காரில் இருக்கும் எஞ்சின்களுடன் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வரும் என தெரிகிறது. வெர்னா காரில் செயலாற்றி வரும் 106 பிஎச்பி பவரையும் 135 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 126 பிஎச்பி பவரையும், 260என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று தெரிகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Here is the list of upcoming Hyundai cars in India.
Story first published: Tuesday, December 2, 2014, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X