விரைவில் அறிமுகமாகும் 5 புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!

By Saravana

நடப்பு ஆண்டில் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை பொறுத்தவரையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையோ அல்லது வரவேற்பையோ பெற்ற மாடல் என்று எதுவும் இல்லை. ஆனால், இதற்கு நேர் மாறாக அடுத்த ஆண்டு பல புதிய மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த புதிய மாடல்கள் நிச்சயமாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு இலக்காகியிருக்கும் மாடல்களாகவே கூறலாம். அந்த வகையில், அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 5 புதிய ஹேட்ச்பேக் கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்கள்

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஆவலைத்தூண்டும் அந்த 5 புதிய கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

1. புதிய ஃபோர்டு ஃபிகோ

1. புதிய ஃபோர்டு ஃபிகோ

இந்திய வாடிக்கையாளர்களால் ரசனைக்குரிய மாடலாக பெயரும், புகழும் பெற்ற ஃபோர்டு ஃபிகோ காரின் புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போதைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாகவும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2. புதிய ஸ்கோடா ஃபேபியா

2. புதிய ஸ்கோடா ஃபேபியா

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டு விட்ட ஸ்கோடா ஃபேபியா காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தோற்றத்திலும், சிறப்பம்சங்களிலும் வெகுவாக மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கார் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தெள்ளத் தெளிவான டிசைனுக்கு மாறியிருக்கும் புதிய ஸ்கோடா ஃபேபியா மீண்டும் தனது பிராண்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க இருக்கிறது. இந்தியாவில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

3.மாருதி ஒய்ஆர்ஏ.,

3.மாருதி ஒய்ஆர்ஏ.,

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய மாருதி கார் ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் டிசைனில் மாருதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது. எர்டிகாவில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை ஆப்ஷனலாகவும் அளிக்கப்படும் வாய்ப்புள்ளது.

4. ஹோண்டா ஜாஸ்

4. ஹோண்டா ஜாஸ்

நீண்ட தாமதத்திற்கு பின்னர் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய ஜாஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு விட்டுவிட ஹோண்டா தீர்மானித்துவிட்டதாக தெரிகிறது. புதிய சிட்டி காரை போன்றே இந்த புதிய ஜாஸ் காரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. தவிர, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் அறிமுகம் செய்யப்படும். பிரிமியம் ஹேட்ச்பேக் கார் விரும்பிகளுக்கு சரியான சாய்ஸாக இருக்கும். இந்த புதிய மாடல் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடியாக போட்டிபோடும்.

5. டாடா போல்ட்

5. டாடா போல்ட்

வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் டாடா போல்ட். அசத்தலான டிசைன் கொண்ட இந்த டாடா போல்ட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ20 கார்களைவிட குறைவான விலையில் வரும் என்பதால், இப்போதே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து காக்க வைத்திருக்கிறது.

Most Read Articles
English summary
Here are the top 5 upcoming premium hatchback cars, which you must consider before buying.
Story first published: Tuesday, December 9, 2014, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X