2017 அக்டோபர் முதல் கிராஷ் டெஸ்ட் விதிகள் அமல்!

Written By:

2017 அக்டோபர் முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்குட்பட்டு, கார்களை தயாரிக்கும் புதிய விதிமுறைகள் இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

நம் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் போதுமானதாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. பெருகி வரும் வாகன எண்ணிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்புக்கு தகுந்தவாறு இந்த விதிகள் வலுவானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன.

Crash Test
 

இந்த நிலையில், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் கார்களை தயாரிப்பதை க, புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கான கிராஷ் டெஸ்ட் விதிகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக, புதிய கிராஷ் டெஸ்ட் மையங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் மத்திய கனரக தொழிற்துறை இணை அமைச்சர் ஜி.எம். சித்தேஷ்வரா விளக்கம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், " கிராஷ் டெஸ்ட்டுகளுக்கான AIS098 மற்றும் AIS 099 ஆகிய தரக்கட்டுப்பாட்டு விதிகளுடன் இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்குப்பட்டு தயாரிப்பாளர்கள் வாகனங்களை தயாரிக்க வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கிராஷ் டெஸ்ட் செய்வதற்கான சோதனை மையங்கள் அமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கிராஷ் டெஸ்ட் அமைப்பு மற்றும் விதிகள் குறித்த சிறப்பு வழிகாட்டு முறைகள் குறித்து சமீபத்தில், டெல்லியில் குளோபல் என்சிஏபி அமைப்பின் செயல்விளக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. இதன்மூலம், கிராஷ் டெஸ்ட் நடைமுறைகள் மற்றும் சோதனை மையங்களை அமைப்பதற்கான வழிகாட்டு முறைகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவானதாக அமைந்தது," என்று கூறினார்.

English summary
Vehicle crash test mandatory from the 1st of October 2017, informed GM Siddeshwara, the Ministry of State in the Ministry of Heavy Industries.
Story first published: Friday, December 26, 2014, 13:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark