அடப்பாவிகளா... டீலரிஷிப்பில் கார் வீல்களை ஆட்டையை போட்ட திருடர்கள்!

ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் டீலர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த புதிய கார்களின் வீல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 மற்றும் 15ந் தேதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்த டீலர்ஷிப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார்டில் வீல்கள் இல்லாமல் நின்ற கார்களின் படங்களை டீலர்ஷிப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கார் மாடல்கள்

கார் மாடல்கள்

ஆடி ஏ1, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சீட் லியோன் கார்களின் சக்கரங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல்கள் விலை மதிப்புமிக்கவை.

மொத்த கார்கள்

மொத்த கார்கள்

டீலர்ஷிப் நிர்வாகம் வெளியிட்டுள்ள படங்களின்படி, 5 ஆடி ஏ1 கார்கள், 4 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிகள், மற்றும் 2 சீட் லியோன் கார்களில் அலாய் வீல்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 44 அலாய் வீல்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பு கொடுத்தால் பரிசு

துப்பு கொடுத்தால் பரிசு

அலாய் வீல்களை திருடிச் சென்றவர்கள் குறித்து துப்புக்கொடுத்தால் 5,000 யூரோக்களை பரிசாக தருவதாக டீலர்ஷிப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

லாக் நட்

லாக் நட்

இதுபோன்ற விலையுயர்ந்த கார்களில் லாக் நட் இருந்திருந்தால், அலாய் வீல்களை கழற்றியிருக்க முடியாது என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

விசாரணை

விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டீலர்ஷிப் நிர்வாகமும் போலீசாருக்கு துப்புக் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Via- Autoevolution

Most Read Articles
English summary
A Dealer often known as Auto Middle Muhlenbruck GmbH, which sells VW Group cars, has merely launched seven footage revealing a essential theft affecting an entire lot of the newer automobiles that that that they had on their lot contained in the metropolis of Neunkirchen.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X