ஆன்லைனில் கார் விற்பனையை துவங்க வால்வோ திட்டம்!

By Saravana

ஆன்லைனில் கார் விற்பனையை துவங்குவதற்கு சுவீடனை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் பிரபல சொகுசு கார் நிறுவனமான வால்வோ, உலகம் முழுவதும் 2,000 டீலர்ஷிப்புகளை கொண்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எளிதான நடைமுறைகளுடன் கார் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக ஆன்லைனில் கார் வாங்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

Volvo Car

மேலும், ஆன்லைனில் அதிக அளவில் விளம்பரம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வால்வோ தலைவர் அலைன் விசெர் கூறுகையில்," நாங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் ஆன்லைனில் கார் விற்பனையை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஆன்லைன் விற்பனை மூலம் டீலர்ஷிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது. டீலர்கள் இல்லாமல் கார் விற்பனை என்பதை நினைத்து பார்க்க முடியாது. ஆன்லைனில் கார் முன்பதிவு செய்தாலும், டீலர் வழியாக கார் டெலிவிரி மற்றும் இதர நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

வால்வோவின் ஆக்சஸெரீகள் மற்றும் மெர்ச்சன்டைஸ் பொருட்களை வாங்கும் 80 சதவீதத்தினர் ஆன்லைன் வழியாக பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனராம்.

எனவே, ஆன்லைனில் கார் விற்பனையை துவங்குவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கார் வாங்கும்போது டீலர்ஷிப்புக்கு நேரில் செல்வதற்கே அதிக வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Swedish carmaker Volvo has announced that it will start selling vehicles online. The company, which competes with other German luxury carmakers, will slowly introduce web sales of its new models and will invest more on digital advertising.
Story first published: Saturday, December 20, 2014, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X