மாருதி கார்களுக்கான சேமிப்பு சலுகைகள் விபரம்!

Written By:

டிசம்பர் மாதத்தில் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் பெரிய அளவிலான சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில் நாட்டின் பெரிய கார் நிறுவனமான மாருதியும் பல்வேறு சேமிப்பு சலுகைகளை வழங்குகிறது.

மாருதி ஸ்விஃப்ட் டீசல் மாடலுக்கு ரூ.30,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை மாருதி அறிவித்துள்ளது. டிசையர் காருக்கு ரூ.45,000 மதிப்புடைய சேமிப்பை பெறுவதற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Maruti Offer
 

மாருதி ரிட்ஸ் காருக்கு ரூ.75,000 மதிப்புடைய சலுகைகளை மாருதி வழங்குகிறது. இதேபோன்று, மாருதி ஆல்ட்டோ காருக்கு ரூ.35,000 முதல் ரூ.55,000 வரையிலான சலுகைகளை மாருதி அறிவி்துள்ளது.

இதுதவிர, மாருதி வேகன் ஆர் மாடலுக்கும் சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் சிறப்பான விற்பனையை மாருதி பதிவு செய்துள்ளது. அதனை ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரிலும் தக்க வைக்கும் வகையில் இந்த சிறப்பு சேமிப்பு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

English summary
Maruti Suzuki is offering huge benefits like cash discounts, exchange bonuses, corporate discounts on its cars. These offers valid till December end. 
Story first published: Saturday, December 13, 2014, 9:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark