60 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கிளாசிக் ஃபெராரி கார்!
ஃபெராரி கார்களின் வயது ஏற ஏற அதன் மதிப்பும் ஏறும் என்பதற்கு சான்றாக பல செய்திகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், லேட்டஸ்ட் தகவலாக 1964ம் ஆண்டு ஃபெராரி கார் ஒன்று ரூ.60 கோடி மதிப்புக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வியக்க வைத்துள்ளது.
1964 ஃபெராரி 250எல்எம் என்ற அந்த மதிப்புமிக்க கிளாசிக் காரை அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தை சேர்ந்த ஆர்எம் நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. இந்த ஏலத்தில் 1966ம் ஆண்டு ஃபெராரி 275 ஜிடிஸ் கார் ரூ.15 கோடிக்கும், 1984ம் ஆண்டு ஃபெராரி 288 ஜிடிஓ கார் மாடல் ரூ.17 கோடிக்கும் ஏலம் போனது.

ஃபெராரி தவிர்த்து ஆடி ஸ்போர்ட் குவாட்ரோ கார் ரூ.2.5 கோடிக்கும், 1969ம் ஆண்டு மாடல் போர்ஷே 911 எஸ் சாஃப்ட் விண்டோ கார் ரூ.1.8 கோடிக்கும், 1975ம் ஆண்டு லம்போர்கினி உராக்கோ கார் ரூ.78 லட்சத்திற்கும் ஏலம் போனது.


Click it and Unblock the Notifications








