புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஆடி ஏ6 கார் அறிமுகம்!

Written By:

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஆடி ஏ6 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சமீபத்தில்தான் ஆடி ஏ6 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல்முறையாக, இந்த காரில் ஆடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Audi A6 Facelift
 

இந்தநிலையில், பழைய 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடலுக்கு பதிலாக, தற்போது புதிய 1.8 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆடி ஏ6 35 TFSI என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படுகிறது.

முந்தைய எஞ்சினை விட, இந்த புதிய 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும். அதேபோன்று,12.7 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தர வல்லதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய பெட்ரோல் மாடலில் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டம் இல்லை. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் மாடல் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், புதிய பெட்ரோல் மாடலுக்கும், டீசல் மாடலுக்கும் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டத்தை தவிர்த்து வேறு வேறுபாடுகள் இருக்காது. ரூ.45.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
The German luxury car maker Audi has now introduced their A6 35 TFSI in an all-new avatar for 2015. Audi has priced their new model at INR 45,90,000 ex-showroom, Mumbai and Delhi.
Story first published: Saturday, September 12, 2015, 12:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark