ஆடி க்யூ3 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது - விபரம்

Written By:

இந்திய சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் கலக்கி வரும் ஆடி க்யூ3 எஸ்யூவி புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சந்தையில் இந்த புதிய மாடலை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது ஆடி கார் நிறுவனம். இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் புதிய சிறப்பம்சங்களையும், விலை விபரத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய ஆடி க்யூ3 மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறம் மற்றும் பின்புற பம்பர் டிசைன்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அலாய் வீல்களும் புதிது. இந்த மாற்றங்களினால், க்யூ3 கெஞ்சம் ப்ரெஷ்ஷான மாடலாக மாறியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச அளவில் ஆடி க்யூ3 எஞ்சின்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில், பழைய மாடலில் இருந்த அதே டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இந்த சொகுசு எஸ்யூவி மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை 8.2 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்த டீசல் சொகுசு எஸ்யூவி மாடல் லிட்டருக்கு 15.73 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

  • எல்இடி பகல்நேர விளக்குகள்
  • எல்இடி டெயில் லைட்டுகள்
  • புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
  • ஆன்டெனா மூலம் சிக்னல் பூஸ்டர் வசதியை அளிக்கும் மொபைல்போன் ஹோல்டர்
  • எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

  • 6 உயிர்காக்கும் காற்றுப் பைகள்
  • இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
  • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
  • பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
விலை விபரம்

விலை விபரம்

புதிய ஆடி க்யூ3 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.28.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் வசதிகள் கொண்ட பிரிமியம் மாடல் ரூ.33.99 லட்சத்திலும், பிரிமியம் ப்ளஸ் மாடல் ரூ.37.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

 
English summary
The 2015 Audi Q3 has been launched in India. The new Audi Q3 has received a few cosmetic changes to woo younger buyers, but mechanically, it remains the same.
Story first published: Thursday, June 18, 2015, 14:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark