கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் விற்பனைக்கு வந்தது - விபரம்

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இலகு எடையுடைய கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல், செயல்திறனிலும் அபாரமாக இருக்கும்.

இந்த காரில் முதல்முறையாக மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் ஆப்ஷனலாக அளிக்கப்படுவது முக்கிய விஷயம். விற்பனைக்கான அறிமுக விழாவிலிருந்து படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகளை விருப்பத்தின்பேரில் பெற்றுக் கொள்ளலாம். புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், முகப்பில் இந்த கார் புதிய பம்பர் அமைப்பை பெற்றிருக்கிறது. மேலும், ஹைபிரிட் அலுமினியம் பாடி பயன்படுத்தப்பட்டிருப்பதால், இலகுவான எடையுடன் செயல்திறனில் அபாரமாக இருக்கும்.

ஏர் சஸ்பென்ஷன்

ஏர் சஸ்பென்ஷன்

இந்த புதிய மாடலில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டிருப்பதால், சொகுசையும், சிறந்த கையாளுமையையும் வழங்கும். எலக்ட்ரானிக் ஸ்பெடபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் டைனமிக் ரைடு கன்ட்ரோல் ஆப்ஷனும் உள்ளதால் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரில் 560 பிஎச்பி பவரையும், 700என்எம் டார்க்கையும் வழங்கும் 4.0 லிட்டர் வி8 பை- டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. பேடில் ஷிஃப்ட் வசதியுடந் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இதில், ஆடியின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

 செயல்திறன்

செயல்திறன்

இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் தொட்டுவிடும் என்பதுடன், மூன்றுவிதமான டாப் ஸ்பீடு கொண்ட வெர்ஷன்களில் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, மணிக்கு 205 கிமீ வேகம் கொண்ட மாடல், மணிக்கு 280 கிமீ வேகம் கொண்ட மாடல் மற்றும் மணிக்கு 305 கிமீ வேகம் கொண்ட மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

விலை

விலை

டெல்லி மற்றும் மும்பையில் ரூ.1.4 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

 
English summary
Audi India recently launched their most iconic supercar the TT Coupe. Now the German luxury car maker has launched a facelifted version of their RS7 supercar. The German luxury car manufacturer has priced its facelifted Audi RS7 at INR 1,40,20,750 ex-showroom, Mumbai and Delhi.
Story first published: Monday, May 11, 2015, 13:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark