டெட்ராய்டில் ஜாகுவாரின் முதல் எஸ்யூவியின் பெயர் அறிவிப்பு!!

Written By:

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் நிறுவனம் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கியுள்ளது. தனது 80 ஆண்டுகால பாரம்பரியத்தில், அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கும் முதல் எஸ்யூவி மாடல் இது.

கடந்த 2013ம் ஆண்டு பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த, ஜாகுவார் சி- எக்ஸ்17 கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தோற்றத்தில் வேற்றுமைகள் அதிகம் தெரியவில்லை.

Jagaur F Pace
 

இந்த புதிய எஸ்யூவி மாடல் ஜாகுவார் எஃப் டைப் கூபே மாடலைவிட கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும். அதாவது, 35,000 பவுண்ட் முதல் 50,000 பவுண்ட் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கான எஞ்சின் விபரங்கள் வெளயிடப்படவில்லை. ஆனால், ஜாகுவார்- லேண்ட்ரோவரின் புதிய இன்ஜெனியம் எஞ்சின்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியில்லையெனில், 3.0 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின், வி6 எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Jaguar have christened their very first SUV as F-Pace and unveiled it at the 2015 Detroit Auto Show. It draws inspiration from the manufacturer's very own C-X17 concept model. The British manufacture, however, claims that their F-Pace is not a SUV, it is a family sports car.
Story first published: Friday, January 16, 2015, 10:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark