500 கிமீ ரேஞ்ச் கொண்ட போர்ஷே எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!!

Written By:

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் போர்ஷே நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரின் உருமாதிரியை காட்சிக்கு வைத்துள்ளது.

போர்ஷே மிஷன் இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த உருமாதிரி கார் டெஸ்லா மாடல் 3 காரைவிட அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வந்துள்ளது. இந்த காரின் சுவாரஸ்யமான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

போர்ஷே பனமெரா காரின் தோற்றத்தை ஒத்திருக்கிறது போர்ஷே மிஷன் இ கார். முன்புறத்தில் மிகவும் தாழ்வான பானட் அமைப்பு கொண்டுள்ளது. அத்துடன் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 21 இன்ச் வீல்கள், பின்புறத்தில் 22 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சூசைடு டோர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த காரில் 600 குதிரைசக்தி திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் எட்டிப்பிடிக்கும் வல்லமை கொண்டது. அதேபோன்று, 0 - 200 கிமீ வேகத்தை வெறும் 12 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் தொட்டுவிடும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். ஸ்போர்ட்ஸ் மோடில் இயக்கும்போது 500 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதுவே, சாதாரண மோடில் வைத்து இயக்கும்போது, இதைவிட அதிக ரேஞ்ச் பெற இயலும் என்று போர்ஷே கூறுகிறது. இந்த காரின் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் போதுமானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிவேக சாதனை

அதிவேக சாதனை

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கான்செப்ட் கார் மாடல் நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கில் வைத்து சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, வெறும் 8 நிமிடங்களில் ஒரு சுற்றை கடந்தது சாதனை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 
English summary
German carmaker Porsche has revealed the Mission E Concept at the 2015 Frankfurt Motor Show. This is Porsche's first attempt of making an all electric car.
Story first published: Monday, September 21, 2015, 8:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark