கடைசி புகாட்டி வெய்ரான் கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் தரிசனம்!

By Saravana

உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்று உலக அளவில் புகழ்பெற்ற புகாட்டி வெய்ரான் கார் உற்பத்தி இலக்கை நிறைவு செய்ய உள்ளது.

மொத்தம் 300 ஹார்டுடாப் வெய்ரான் கார்களும், 150 ஓபன்டாப் கார்களும் தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டது. அதில், 300 ஹார்டுடாப் கார்கள் உற்பத்தி கடந்த சில வருடங்களுக்கு முன் நிறைவடைந்தது.

தற்போது ஓபன்டாப் வெய்ரான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், உற்பத்தி இலக்கு வைக்கப்பட்ட 450 கார்களில் 432 கார்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஓபன்டாப் வெய்ரான் கார்கள் மட்டுமே விற்பனைக்கு எஞ்சியுள்ளன. இந்தநிலையில், 450வது வரிசை எண் கொண்ட வெய்ரான் காரை அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்க உள்ளதாக புகாட்டி தெரிவித்துள்ளது.

ஜெனீவா மோட்டார் ஷோவுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் செய்தியாக இது அமைந்துள்ளது. புகாட்டி வெய்ரான் காரில் 1200எச்பி பவரையும், 1500என்எம் டார்க்கையும் வழங்கும் 8.0 லிட்டர் W16 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.16 கோடி விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Geneva Motor Show is a much awaited event for auto enthusiasts as well as for carmakers. What makes the 2015 show even more special is the cars that are headed there to be displayed. Apart from the Ferrari's and the Honda NSX, there will be a very special contender this time. The very last Bugatti Veyron.
Story first published: Saturday, February 7, 2015, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X