முன்பதிவுக்கு முந்துங்கள்.... மொத்தம் 500 மெக்லாரன் 675 எல்டி கார்கள் மட்டுமே உற்பத்தி

Written By:

ஜெனீவா மோட்டார் ஷோவில் மெக்லாரன் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மெக்லாரன் 675எல்டி என்று அழைக்கப்படும் இந்த புதிய கார் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

அதிசக்திவாய்ந்த ட்வின் டர்போ எஞ்சின் கொண்ட இந்த கார் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை வெகுவாக கவரும். இந்த காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 500 மெக்லாரன் 675எல்டி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதால், அடுத்த சில நாட்களில் இந்த காருக்கான முன்பதிவு முடிந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீளமான வால்பகுதி

நீளமான வால்பகுதி

இந்த காரின் பெயரில் இருக்கும் LT என்ற ஆங்கில எழுத்துக்கள் Long tail என்பதை குறிக்கின்றன. அதாவது, இதுவரை வெளிவந்த மெக்லாரன் கார்களிலேயே நீளமான வால்பகுதியை கொண்ட மாடலாக இதனை மெக்லாரன் குறிப்பிடுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

666 எச்பி பவரையும், 700என்எம் டார்க்கையும் வழங்கும் 3.8 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் இருக்கிறது. எஞ்சின் ஆற்றல் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 330கிமீ வரை எட்டக்கூடியது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் அமைப்பு மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு, சிவப்பு கார்பன் ஃபைபர் அலங்காரம் வசீகரிக்கும் அம்சம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கெட் இருக்கைகளும் குறிப்பிட்டு கூறலாம்.

விலை

விலை

இந்த புதிய மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார் 3,49,500 டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

 
English summary
The 2015 Geneva Motor Show is a stage for carmakers to showcase their latest designs. McLaren took full advantage of that by showcasing the McLaren 675 LT and also announced the production of the car.
Story first published: Thursday, March 5, 2015, 10:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark