பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி... வருகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ!!

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரின் அதிசக்திவாய்ந்த மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த விதத்தில், தனது போலோ காரின் அதிசக்திவாய்ந்த மாடலான போலோ ஜிடிஐ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் இந்திய சாலைகளில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவது பற்றிய படங்களும், தகவல்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. கார் பிரியர்களை பரவசப்படுத்தும் இந்த காரை வாங்குவதற்கான சில காரணங்களை உங்களுக்காக முன் வைக்கிறோம்.

 01. சக்திவாய்ந்த எஞ்சின்

01. சக்திவாய்ந்த எஞ்சின்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரில் சர்வதேச அளவில் கார் பிரியர்களை வசீகரித்த 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. மேலும், சிறந்த எஞ்சின்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்து வருகிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 189 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

02. மிரட்டும் செயல்திறன்

02. மிரட்டும் செயல்திறன்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடும். நகர்ப்புறத்தில் காம்பேக்ட்டாகவும், செயல்திறன் மிக்க காரை வாங்க விரும்புவோர்க்கும் பர்ஃபெக்ட் சாய்ஸாக இருக்கும். சிக்னலிலும், டிராக்கிலும் சீறிப்பாய விரும்புவோர்க்கான அத்துனை அம்சங்களும் கொண்ட எஞ்சினை பெற்றிருக்கிறது.

03. ஆடி ஏ3ஐ விஞ்சிய ஆக்சிலரேசன்

03. ஆடி ஏ3ஐ விஞ்சிய ஆக்சிலரேசன்

ஸ்கோடா ஆக்டாவியா, ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மற்றும் ஆடி ஏ3 போன்ற கார்களையே விஞ்சும் செயல்திறனும், ஆக்சிலரேசனும் கொண்டது. எனவே, பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களின் முதல் சாய்ஸாக மாற வாய்ப்புள்ளது.

 04. கையாளுமை...

04. கையாளுமை...

வளைவுகளில் மிக மிக சிறப்பான கையாளுமையை வழங்கும். முன் எந்த காரிலும் கண்டிராத அளவுக்கு இதன் கையாளுமை இருக்கும். அதற்கு தக்கவாறு சஸ்பென்ஷன் அமைப்பும், ஸ்டீயரிங் அமைப்பும் கொண்டது. மேலும், இது ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் கார் மாடலாக இருக்கும்.

05. டிராக்கிலும் ஓட்டி மகிழலாம்...

05. டிராக்கிலும் ஓட்டி மகிழலாம்...

சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான அம்சங்களை கொண்டிருப்பதோடு, அதிகபட்ச செயல்திறனை சென்னை, கோவை ரேஸ் டிராக்குகளில் ஓட்டியும் நீங்கள் பார்க்க முடியும். அப்போது இதன் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

06. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ்

06. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ்

வெளிநாடுகளில் ஃபோக்ஸ்வேகனின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இதில், டிஎஸ்ஜி கியர்பாக்ஸின் விரைவான கியர் மாற்றங்கள் புதுமையான அனுபவத்தை வழங்கும்.

07. கட்டுமானத்தில் பீரங்கி...

07. கட்டுமானத்தில் பீரங்கி...

சிறந்த கட்டுமானம் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் போலோ என்பது உங்களுக்கு தெரியும். அதிலும், குறிப்பாக போலோ ஜிடிஐ மிகச்சிறந்த கட்டுமானம் கொண்டதாக இருக்கும். அதாவது, பீரங்கி போன்ற காராக சிலாகித்து கூறப்படுகிறது.

08. பாதுகாப்பும் கூட...

08. பாதுகாப்பும் கூட...

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிரைவர் அலர்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் போஸ்ட் கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். எனவே, அதிக வேகத்தில் செல்லும்போது தன்னம்பிக்கையுடன் ஓட்ட முடியும்.

 09. மனநிறைவு

09. மனநிறைவு

உலக அளவில் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை வசீகரித்த மாடல். ஆடம்பர கார்களை தவிர்த்து இந்த கார்களை வாங்கிய பிரபலங்களும் ஏராளம். கார் எஞ்சினை ட்யூனிங் செய்தும், வெளிச்சந்தை ஆக்சஸெரீகளை போட்டும் அலுத்துக் கொண்டவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்த காரை வாங்கலாம்.

10. எதிர்பார்க்கும் விலை

10. எதிர்பார்க்கும் விலை

இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். எனவே, ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் சிறந்த செயல்திறன் மிக்க காரை விரும்புவோர்க்கு இந்த கார் சிறந்த சாய்ஸாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

 
English summary
Yes, the Volkswagen Polo GTI is confirmed for India and will cost anything up to INR 20 lakh. But why would you buy a small car for big bucks? Believe it or not, there are several good reasons for you to buy the GTI, and most of them have to do with it being one of the very few cars soon to be available in the country that is here to give you joy. Pure, unadulterated driving joy. So let's see what you can get in this upcoming hot hatch that you can't in any other.
Story first published: Wednesday, July 29, 2015, 16:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark