2016 பி எம் டபுள்யூ எம்2 கூபே காரை பற்றிய தகவல்கள்!

Written By:

பிஎம்டபுள்யூ கார் விரும்பிகளுக்கு 2016 பிஎம்டபுள்யூ எம்2 கூபே கார் வடிவில் பல ஆச்சர்யங்கள் காத்துகிடக்கிறது. இந்த புதிய கார், 1எம் கூபே ரக காருக்கு மாற்றாக வர உள்ளது. 2016 பிஎம்டபுள்யூ எம்2 கூபே காரில் என்ன என்ன விசேஷங்கள் காத்துக்கிடக்கின்றது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

முதன்மையாக, 1எம் கூபே மற்றும் 2016 பி எம் டபுள்யூ எம்2 கூபே என்ற கார்களின் பெயர்களில் வருகிற ஆங்கில எழுத்தான "எம்" என்பது ஜெர்மானிய கார் உற்பத்தியாளரான பிஎம்டபுள்யூ-வின் மோட்டர்ஸ்போர்ட்ஸ் பிரிவை குறிக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மிஷலினின் பைலட் சூப்பர் ஸ்போர்ட் டையர்களை கொண்டுள்ள 19-இஞ்ச் எடைகுறைந்த சக்கரங்கள் பொருந்தும் வகையில் எம்2 கூபே-வின் ஃபெண்டர்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பம்பர்களிலும் சில மறுவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் நான்கு எக்ஸ்ஹாஸ்ட்-களும் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

2016 பிஎம்டபுள்யூ எம்2 கூபே-வில் 3.0 லிட்டர், ட்வின்-டர்போ சார்ஜர்கள் கொண்ட 6-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 365 ஹார்ஸ்பவரையும், உச்சபட்ச டார்க்காக 465 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள ஓவர் பூஸ்ட் ஃபங்ஷன் எனும் வசதி, உச்சகட்டமாக 500 என் எம் டார்க் வரையிலான டார்க் திறனை வெளியிட உதவுகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

எம்2 கூபே வின் உட்புற வேலைப்பாடுகளை பொருத்த வரை, லெதரில் ப்ளூ காண்ட்ராஸ்ட் தையல்கள் மேற்கொள்ளபட்டுள்ளது. மேலும், அல்காண்டரா மற்றும் கார்பன் ஃபைபர் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இந்த 2016 பி எம் டபுள்யூ எம்2 கூபே கார் இங்கிலாந்தில் 44,000 பவுண்ட்கள் விலையில் கிடைக்கின்றது.

செயல்திறன்

செயல்திறன்

எம்2 கூபே-வின் ஸ்டான்ர்ட் ரக இஞ்ஜினில், 6-ஸ்பீட் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இது மணிக்கு, 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.5 நொடிகளில் எட்ட உதவுகிறது. எம்2 கூபே-வானது, டி சி டி எனப்படும் ஆப்ஷனல் 7-ஸ்பீட் ட்யூவல் டிரான்ஸ்மிஷன் (டி சி டி) உடனும் கிடைக்கிறது. இந்த டி சி டி மூலம் மணிக்கு, 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை இன்னும் கூடுதலான வேகத்தில் எட்ட முடியும்.

டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

டி சி டி-யில், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட்+ என அழைக்கப்படும் வாகனம் இயக்கும் மோட்கள் மற்றும் லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. எம்2 கூபே-வில் மேனுவல் அல்லது ஆட்டோ கியர்பாக்ஸ் மோட் மூலம், எலக்ட்ரானிக் முறையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான கட்டுபடுத்தப்பட்ட வேகத்தை எட்ட முடியும்.

வலுமிக்க சேஸீ

வலுமிக்க சேஸீ

ஹேண்டலிங்கை பொருத்தவரை, எம்2 கூபே-வில் சேஸி உள்ளிட்ட பாகங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சஸ்பென்ஷனுக்கு அலுமினியத்தால் ஆன பாகங்களும், ரீ-ட்யூன் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்டியரிங் அமைப்புகளும், கூடுதல் திறனை கூட்ட "எம்" டிஃபரன்ஷியலின் சிறப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

  
English summary
BMW is launching their 2016 BMW M2 Coupe soon. There are lots of surprises for BMW enthusiasts in this new 2016 BMW M2 Coupe.
Story first published: Friday, October 16, 2015, 8:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark