புதிய செவர்லே பீட் எப்படியிருக்கு... ஒரு சுற்று சுற்றி பார்த்துடுவோமா?

Posted By:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் மோட்டார் வாகன கண்காட்சியில் புதிய செவர்லே பீட் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் ஸ்பார்க் என்ற பெயரிலும், இந்தியாவில் பீட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பழைய காரைவிட டிசைனில் அதிக அளவில் மாற்றங்களை கண்டிருக்கிறது புதிய செவர்லே பீட். முன்புற க்ரில், டெயில் லைட்டுகள் பார்க்க நன்றாகவே இருக்கிறது. பழைய காரை ஒப்பிடும்போது, புதிய மாடல் தாழ்வாக தெரிகிறது. பழைய கார் போன்று இளைய வாடிக்கையாளர்களை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கவரும் டிசைனுக்கு மாறியிருக்கிறது புதிய செவர்லே பீட் கார்.

இந்திய மாடல்

இந்திய மாடல்

தற்போது படங்களில் காணும் புதிய செவர்லே பீட் கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய பீட் காரின் டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

உள்பக்கத்தில் தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்டுகள், சென்டர் கன்சோல், மீட்டர் கன்சோல் ஆகியவற்றின் டிசைனிலும் முற்றிலும் புதிதாக இருக்கும்.

 வீல் பேஸ் அதிகம்

வீல் பேஸ் அதிகம்

பழைய மாடலில் பலர் ஒதுக்குவதற்கு காரணம், பின்புற இருக்கையின் நெருக்கடியான இடவசதி. ஆனால், புதிய மாடலின் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டிருப்பதால், பின் இருக்கை பயணிகள் சற்று நெருக்கடியற்ற பயணத்தை பெற முடியும்.

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய செவர்லே பீட் காரில் 7 இன்ஞ் திரையுடன் கூடிய மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய செவர்லே பீட் காரில் 98 பிஎச்பி சக்தியை அளிக்கும் 1.4 லிட்டர் ஈக்கோடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பழைய மாடலைவிட அதிக சக்தி கொண்ட எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் வரிச்சலுகைக்காக இந்த எஞ்சினுக்கு பதிலாக 1.2 லிட்டர் எஞ்சின் அறிமுகம் செய்யப்படும்.

 கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

சர்வதேச அளவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

உற்பத்தி

உற்பத்தி

தென்கொரியாவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாட்டுச் சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது.

சர்வதேச மாடல்

சர்வதேச மாடல்

சர்வதேச அளவில் 40 நாடுகளில் இந்த புதிய செவர்லே பீட் கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

 இந்தியாவிற்கு எப்போது?

இந்தியாவிற்கு எப்போது?

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய செவர்லே பீட் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 
English summary
2016 Chevrolet beat Unveiled New York Auto Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark