புதிய அத்தியாயம் எழுத வந்த புதிய ஃபோர்டு ஜிடி கார்!

Posted By:

புகழ்மிக்க ஃபோர்டு ஜிடி பிராண்டில் புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய தலைமுறை ஃபோர்டு ஜிடி கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில், ஆச்சரியம் கலந்து மகிழ்ச்சியை இந்த புதிய மாடல் ஏற்படுத்தியிருக்கிறது. கார் ஆர்வலர்களை இந்த கார் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் காரணத்தின் பின்னணிகளை ஸ்லைடரில் காணலாம்.

லீமான்ஸ் வெற்றியின் பொன்விழா மாடல்

லீமான்ஸ் வெற்றியின் பொன்விழா மாடல்

1960களில் கார் பந்தயங்களில் கலக்கிய ஃபோர்டு நிறுவனத்தின் ஜிடி40 ரேஸ் கார்களின் டிசைன் மாதிரியை வைத்து வடிவமைக்கப்பட்ட மாடல்தான் ஃபோர்டு ஜிடி ஸ்போர்ட்ஸ் கார். 1966ல் லீமான்ஸ் ரேஸில் ஃபோர்டு ஜிடி40 கார் வெற்றி பெற்றதன் பொன் விழாவை கொண்டாடும் வகையில், இந்த புதிய ஃபோர்டு ஜிடி மாடல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து 4 ஆண்டுகள் லீமான்ஸ் ரேஸில் இந்த கார் வெற்றி கண்டது.

 முதல் தலைமுறை

முதல் தலைமுறை

முதலாம் தலைமுறை ஃபோர்டு ஜிடி ஸ்போர்ட்ஸ் கார் 2005 முதல் 2006 வரை தயாரிப்பில் இருந்தது. இந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், புதிய தலைமுறை ஃபோர்டு ஜிடி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய தலைமுறை ஃபோர்டு ஜிடி மாடல் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது.

 ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் 591 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 321 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றிருக்கும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கார்பன் ஃபைபர் பாகங்களால் எடை கணிசமாக குறைந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. இதன் காரணமாக, எடைக்கும், சக்தியை வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதாச்சாரத்தில் இது மிகச்சிறந்த கார் மாடல் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது. சிசர் கதவுகள், ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ், ரேஸ் கார்களில் இருக்கும் புஷ்கார்டு சஸ்பென்ஷன் போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

குளோபல் மாடல்

குளோபல் மாடல்

இரண்டு இருக்கை ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தை ஃபோர்டு ஜிடி முதலில் அமெரிக்காவிலும், பின்னர் உலக அளவிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த காரை தயாரித்து விற்பனை செய்ய ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

English summary
Few cars evoke excitement and nostalgia like the Ford GT can. Ford's flagship performance vehicle boasts of unrivalled racing heritage that is etched permanently in motorsport's Hall of Fame, after its four consecutive victories at Le Mans from 1966 to 1969.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark