2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

Posted By:

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடைபெறும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

டெல்லியில் நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2012ம் ஆண்டு வரை டெல்லி பிரகதி மைதானத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ
 

இந்தநிலையில், இடநெருக்கடியை தவிர்க்கும் விதத்தில், கடந்த ஆண்டு முதல் இரு இடங்களில் நடத்தப்படுகிறது. அதாவது, பிரகதி மைதானத்திலும், நொய்டாவிலுள்ள இந்திய வர்த்தக கண்காட்சி மையத்திலும் நடத்தப்படுகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு மோட்டார் கண்காட்சி பிப்ரவரி 5ந் தேதி முதல் 9ந் தேதி வரை நொய்டாவிலுள்ள இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று, வாகன உதிரிபாக கண்காட்சி டெல்லி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 4ந் தேதி முதல் 7ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வாகன கண்காட்சி என்பதோடு, அடுத்த இரு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மற்றும் பைக் மாடல்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும் என்பதால், பார்வையாளர்களும் மற்றும் வாகன துறை பத்திரிக்கையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

English summary
Delhi international motor show will held between 5th to 9th of February, 2016 and Component Show is scheduled for 4th to 7th of February, 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark