கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்!

யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்று அசத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் குழந்தைக்கான பாதுகாப்பு, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் பற்றி இந்த சோதனையில் மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், காரில் இருக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி அறிந்துகொள்ளும் சோதனைகள் செய்யப்பட்டன.

இதில், அனைத்து சோதனைகளிலும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராக புதிய ஸ்கோடா சூப்பர்ப் அறியப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மாடல்

மாடல்

கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இங்கிலாந்தில் விற்பனைக்கு செல்லும் மாடல். இந்த காரில் 9 ஏர்பேக்குகள் உள்பட பல பாதுகாப்பு வசதிகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கிறது.

அனைத்திலும் சாதித்தது...

அனைத்திலும் சாதித்தது...

இந்த புதிய காரை 4 விதமான கிராஷ் டெஸ்ட் மற்றும் ஒரு மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் தொடர்பான சோதனையில் யூரோ என்சிஏபி அமைப்பு உட்படுத்தியது.

முன்புற பாதுகாப்பு

முன்புற பாதுகாப்பு

காரன் முன்புறத்தின் 40 சதவீத பகுதியை மணிக்கு 64 கிமீ வேகத்தில் தடுப்பு மீது மோதச் செய்து சோதிக்கப்பட்டது. அடுத்து, காரின் முன்பகுதியை முழுவதுமாக தடுப்பு மீது மோதி சோதிக்கப்பட்டது. இதில், இரண்டிலும் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை ஸ்கோடா சூப்பர்ப் கார் பெற்றது.

பக்கவாட்டு மோதல் சோதனை

பக்கவாட்டு மோதல் சோதனை

அடுத்து காரின் பக்கவாட்டுப் பகுதி பாதுகாப்பு குறித்து இரண்டு விதமான சோதனைகள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சோதனைகளிலும் ஸ்கோடா சூப்பர்ப் சிறப்பான பாதுகாப்பை பயணிகளுக்கு தருவது டம்மி எனப்படும் மனித பொம்மைகள் மூலம் உறுதியானது. இதையடுத்து, மோதல் தவிர்ப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இதன் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. எனவே, அனைத்து விதங்களிலும் ஓர் சிறந்த பாதுகாப்புமிக்க காராக 5 நட்சத்தரி அந்தஸ்தை பெற்றது.

ஸ்கோடா தரம்

ஸ்கோடா தரம்

ஸ்கோடா கார்கள் சிறந்த கட்டுமானத்திற்கு பெயர் பெற்றவை. அதனை நிரூபிக்கும் விதத்தில் தற்போது புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரும் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது. சிறந்த பாதுகாப்பு கொண்ட கார் என்ற பெருமையை பெறுவதன்மூலம், இந்த காரின் வர்த்தகத்திற்கு மிக சாதகமாக அமையும்.

இந்தியா வருகிறது...

இந்தியா வருகிறது...

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #superb #auto news
English summary
The new Skoda Superb has been awarded the maximum five-star rating in Euro NCAP crash tests. All current Skoda model lines have been awarded a maximum five-star rating in Euro NCAP crash tests.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X