புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரின் படங்கள்!

Written By:

இந்த மாதம் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய டொயோட்டா இன்னோவா காரின் படங்களை ஆட்டோநெட்மேக்.நெட் என்ற இணையதளத்தின் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்த காரின் முக்கிய விபரங்களை இதே இணையதளம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தற்போது புதிய தலைமுறை இன்னோவா காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற படங்களை வெளியிட்டு இருக்கிறது. ஸ்லைடரில் அந்த படங்களையும் கூடுதல் தகவல்களையும் காணலாம்.

முகப்புத் தோற்றம்

முகப்புத் தோற்றம்

முகப்பு டிசைனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இரட்டை க்ரோம் பட்டைகள் கொண்ட க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைனும், பம்பரும் மாற்றப்பட்டுள்ளது. எல்இடி பிரேக் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்பாய்லரும் உள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் டிசைன் கூடுதல் பிரிமியமாக மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய டேஷ்போர்டு அமைப்பு, புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பலதரப்பட்ட தகவல்களை பெறும் விதத்தில் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

இந்தோனேஷியாவில் ஜி,வி மற்றும் க்யூ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் எனப்படும் சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தும் தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், திருட்டு எச்சரிக்கை அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்தோனேஷியாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. இவை 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டொயோட்டா இன்னோவா காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் டொயோட்டா இன்னோவா கார் இந்தியாவில் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Source 

English summary
Autonetmagz has posted a few images of the upcoming Toyota Innova 2016 model, which is scheduled for launch this month in Indonesia.
Story first published: Tuesday, November 10, 2015, 16:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark