ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் 2015 லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் அறிமுகம், வாடிக்கையாளர்களும், லேண்ட்ரோவர் நிறுவனமும் ஆவலுடன் எதிர்பார்த்த கணமாக உள்ளது.

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் அறிமுகம்

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் அறிமுகம்

2015 லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் நடை பெறுகின்றது.

இந்த 2015 லாஸ் ஏஞ்ஜலஸ் ஆட்டோ ஷோ, நவம்பர் 17-ல் துவங்கி நவம்பர் 29 வரை நிகழ்கின்றது. இதில், நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை, பத்திரிக்கை துறையினர் மற்றும் வர்த்தகர்கள் அனுமதிக்கபடுவர்.

நவம்பர் 20 முதல் நவம்பர் 29 வரை பொதுமக்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

புகைபடங்கள் வெளியீடு;

புகைபடங்கள் வெளியீடு;

முன்னதாக, ரேஞ்ச் ரோவர் இவோக் பல முறை பரிசோதித்து பார்க்கபட்டது. இதன் சோதனை முயற்சிகள் குறித்த புகைப்படங்களை ரேஞ்ச் ரோவர் இவோக் நிறுவனம் அவ்வபோது வெளியிட்டு கொண்டிருந்தது.

சமீபத்தில், ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் குறித்த படங்களும், வீடியோக்களையும் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த புதிய கார் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் காரின் குளோபல் டெப்யூட் (உலக அளவிலான) அறிமுகம், நவம்பர் 18, 2015 நிகழ உள்ளதாக தெரிகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட்டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் கூரை கொண்ட கார்களை போன்றே, இதன் இஞ்ஜினும் 9-ஸ்பீட் இஞ்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எடை;

எடை;

இந்த காரில், கூரை இல்லாததால், அதிக அளவிலான உலோகம் எடுக்கபட்டாலும், அது இன்னும் அதே எடை அல்லது கூடுதல் எடையுடனேயே உள்ளது.

இதன் கூடுதல் எடை, அதிக வலுவூட்டுதலின் விளைவாக இருக்க முடியும்.

திறன்;

திறன்;

எடை கூடுதலாக இருந்தாலும், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 96 கீலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.8 நொடிகளில் எட்டிவிடும்.

மேலும், உச்சபட்சமாக மணிக்கு, 180 கிலோமீட்டர் தூரத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் காரின் இண்டீரீயர் (உட்புற) அமைப்பானது, வழக்கமான எவோக் காரின் இண்டீரியர் அமைப்பை போன்றே உள்ளது.

இந்த ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் காரில், நகர்த்த முடியாத வகையில் பொருத்தபட்டுள்ள இரட்டை ரியர் (பின் இருக்கை) சீட்கள் உள்ளது.

ரியர் சீட்களுக்கு இடையே, மறு-வடிவமைக்கபட்ட குவார்டர் ட்ரிம் ஸ்பீக்கர்கள் கொண்ட போல்ஸ்டர்கள் உள்ளது.

இதன் ரியர் அமைப்பில், பெரியவர்களும் அமரும் வகையிலும் இடம் உள்ளது, ஆனால், சற்று இறுக்கமாக இருக்க வாய்ப்புள்ளதாக லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவிக்கிறது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார், எஸ்ஈ டைனமிக் மற்றும் ஹெச்எஸ்ஈ டைனமிக ட்ரிம்களில் கிடைக்க உள்ளது. இது 2017 மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை;

விலை;

இதன் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக தெரியவில்லை.

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார், 51,470 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 34.19 லட்சம் ரூபாய்) விலையில் விற்கபடுகிறது.

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் கார் விலை, வழக்கமான கூரை கொண்ட காரை காட்டிலும், 4,000 அமெரிக்க டாலர்கள் (2.65 லட்சம் ரூபாய்) மட்டுமே விலை கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
2017 Range Rover Evoque Convertible to make its Global Debut. The Range Rover Evoque convertible will make its global debut on November 18th. 2015 Los Angeles Auto Show takes place from November 17 to November 29th 2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X