அபார்த் 595 மாடலின் யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் கார் அறிமுகம்

Written By:

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம், தனது அபார்த் 595 காரின், புதிய யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ.ஜி.பி எனப்படும் உலகின் முதன்மையான மோட்டார்சைக்கிள் பந்தயத் தொடரில் பங்கேற்கும் மோவிஸ்டார் யமாஹா அணிக்கு, அபார்த் நிறுவனம் தான் அதிகார பூர்வ ஸ்பான்சராகவும், கார் சப்ளையராகவும் உள்ளது. மோவிஸ்டார் யமாஹா அணி, ஜப்பானை மையமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அணியில் ஜார்ஜ் லோரன்ஸோ மற்றும் வேலண்டினோ ரோஸ்ஸி உள்ளிட்ட வீரர்களை கொண்டுள்ளது.

இந்த அணி மோட்டோ.ஜி.பி. கன்ஸ்ட்ரக்டர்ஸ் சேம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,யமஹா ஃபேக்டரி ரேஸிங் அணியை பெருமைப்படுத்தும் விதத்தில், அபார்த் 595 காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை ஃபியட் அறிமுகம் செய்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அபார்த் 595 யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் கார், 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் இஞ்ஜினால் இயக்கப்படுகிறது.

இந்த இஞ்ஜின் 160 ஹார்ஸ்பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரில் ரெக்கார்டு ஹேட்ச்பேக் மோன்ஸா 4 அவுட்லெட் வால்வ் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு இஞ்ஜினியர்கள் வடிவமைத்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் கார் 17 இஞ்ச் ஃபார்முலா மேட் பிளாக் ஃபினிஷ் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

சிறப்பான நிலைத்தன்மை, கையாளுமை வழங்குவதற்காக, அபார்த் பிரிவு இஞ்ஜினியர்கள், இந்த காரின் உயரத்தை குறைத்து, புதிய சஸ்பென்ஷன் அமைப்பை வழங்கியுள்ளனர்.

 செயல்திறன்

செயல்திறன்

இதனால், உச்சபட்சமாக மணிக்கு 209 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காரை இயக்க முடியும்.

மேலும், மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை 7.4 நொடிகளில் எட்ட முடியும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

அபார்த் 595 யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் காரின் விலை 17,420 பவுண்ட்களாக (இந்திய மதிப்பில் சுமார் 17,40,209 ரூபாயாக) உள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கார்கள், ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது. இது உடனடியாக இந்தியாவில் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை.

கவரும் அம்சங்கள்

கவரும் அம்சங்கள்

அபார்த் 595 யமாஹா ஃபேக்டரி ரேசிங் எடிஷன் காரின் அறிமுகம், அவர்களின் கார் தொகுப்புகளுக்கு புதிய பரிணாமத்தை சேர்த்துள்ளது என அபார்த் காரின் பிராண்ட் மேனேஜரான கெர்ரி சௌதெரிங்டன் தெரிவித்துள்ளார்.

இந்த காரில், அதிக அளவில் உபகரணங்கள்

சேர்க்கப்பட்டுள்ளதாலும், இதன் திறன் கூட்டப்பட்டுள்ளதாலும், இந்த அபார்த் ஸ்பெஷல் எடிஷன் கார்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Abarth 595 Yamaha Factory Racing Edition Car is revealed. Abarth 595 Yamaha Factory Racing Edition Car comes up with several upgraded parts and increased performance. Abarth Punto is introduced in India on 19th of October 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark