புதிய ஆடி க்யூ-7 எஸ்யூவி மலேஷியாவில் அறிமுகம்... அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ்!!

By Ravichandran

ஆடி நிறுவனத்தின் புதிய க்யூ-7 எஸ்யூவி மாடல் மலேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆடி நிறுவனம் தங்களின் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு வகையிலான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

க்யூ-டிசைன்;

க்யூ-டிசைன்;

இந்த ஆடி க்யூ-7 மாடல், க்யூ டிசைன் அல்லது எஸ்யூவி டிசைன்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

செதுக்கப்பட்டுள்ள விளிம்புகள் முதல், ஆடியின் டிரேட்மார்க் ஒற்றை பிரேம் கிரில், பகல் நேரத்திலும் எரியும் ஆடி சிக்னேச்சர் விளக்குகள், எல்ஈடி விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த க்யூ-7 மாடல் காரில் உள்ளது.

புதிய க்யூ-7 காரின் செதுக்கப்பட்டுள்ள தோள்பட்டை போன்ற வடிவம், சரியான வகையில் உள்ள டெய்ல் கேட், வீல் ஆர்ச்சுகள் போன்ற அம்சங்கள், முதல் தலைமுறை க்யூ-7 எஸ்யூவியின் தன்மைகளை, தழுவி அமைந்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஆடி க்யூ-7 எஸ்யூவியில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ வி6 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 8-ஸ்பீடு டிப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 333 பிஹெச்பி-யையும், 440 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது கம்பைண்ட் டைரக்ட் இஞ்ஜெக்‌ஷன் மற்றும் பன்மடங்கு இஞ்ஜெக்‌ஷன் வசதி கொண்டுள்ளதால், மாசு உமிழ்வு குறைந்து,எரிபொருள் திறன் அதிகரிக்கின்றது.

செயல் திறன்;

செயல் திறன்;

புதிய ஆடி க்யூ-7, ஆல் வீல் டிரைவ் குவாட்ரோ சிஸ்டம் கொண்டுள்ளதால், நின்ற நிலையில் இருந்து 100 கிலோமீட்டர்வரையிலான வேகத்தை 6.3 நொடிகளில் எட்டிவிடுகிறது.

இதன் முந்தைய குவாட்ரோ சிஸ்டம், 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை 7.9 நொகளிலேயே எட்டும் திறன் கொண்டுள்ளதாக இருந்தது.

எலக்ட்ரானிக் முறையில் இயக்கபடும் போது, உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

பரிமாணங்களை பொருத்த வரை, புதிய ஆடி க்யூ-7 கார், 5.05 நீளமும், 1.97 மீட்டர் அகலமும், 1.74 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இந்த புதிய ஆடி க்யூ-7 கார் தான், இதன் செக்மண்ட் வகையில் அதிக அளவிலான இண்டீரியர் இடவசதி கொண்டுள்ளதாக ஆடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

எடை;

எடை;

இதற்கு முந்தைய மாடல்களை காட்டிலும், புதிய ஆடி க்யூ-7 கார் 325 கிலோகிராம் எடை குறைவாக கொண்டுள்ளது.

இலகுவான கட்டுமானம், குறைந்த எடை கொண்ட அலுமினிய கூறுகளின் பயன்பாட்டின் மூலம், ஆடி நிறுவனத்தால் இந்த அளவிலான எடை குறைப்பு செய்ய சாத்தியமானதாக தெரிகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

மைலேஜ் அம்சங்களை பொருத்த வரை, புதிய ஆடி க்யூ-7 கார், 100 கிலோமீட்டர் தூரத்திற்கு, 7.9 லிட்டர் எரிபொருளை செலவிடுகிறது. அதாவது

சராசரியாக ஒரு லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றது.

மேலும், ஒரு கிலோமீட்டருக்கு 183 கிராம்கள் என்ற அளவில் மட்டுமே, கார்பன் டை ஆக்சைட்-டை மாசு உமிழ்வு செய்கிறது.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சமாக, ஆடி ஆடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வசதியினை வழங்குகின்றது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

இதர சிறப்பு அம்சங்களாக, புதிய ஆடி க்யூ-7 கார், ஆல் ரோட் மோட் என்ற சிறப்பம்சம் கொண்டுள்ளது.

இதன் படி, கலப்பு நிலப்பரப்பு கொண்ட பகுதிகளில் செல்லும் போது, 25 மில்லிமீட்டர் என்ற அளவில் ரைட் ஹைட் எனப்படும் காரை இயக்கும் உயரத்தை உயர்த்தி கொள்கிறது.

அதேபோல், ஆஃப்ரோட் மோட் மூலம் காரை இயக்கும் போது, 60 மில்லிமீட்டர் வரையில், என்ற அளவில் ரைட் ஹைட் எனப்படும் காரை இயக்கும் உயரத்தை உயர்த்தி கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

புதிய ஆடி க்யூ-7 மாடல், 10 வண்ணங்களில் கிடைக்கின்றது.

கிளேஷியர் வைட், கராரா வைட், காரட் பீஃஜ், ஃப்ளோரட் சில்வர், இங்க் புளூ, கிராஃபைட் கிரே, ஆர்கஸ் பிரௌன், நைட் பிளாக், ஆர்கா பிளாக், பெர்ல் எஃபக்ட் கொண்ட ஸ்பெஷல் டேட்டோனா கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

விலை;

விலை;

இந்த ஆடி க்யூ-7 மாடல், மலேஷியாவில் 589,900 மலேஷிய ரிங்கிட்கள் (இந்திய மதிப்பில் 91.06 லட்சம் ரூபாய்) விலையில் கிடைக்கின்றது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

ஆடி க்யூ-7 மாடல், இந்தியாவில் அடுத்த மாதம் (டிசம்பர் 2015) அறிமுகம் செய்யபடும் எனப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
All-New Audi Q7 is Launched In Malaysia and India Launch is expected very soon. Regarding the launch of All-New Audi Q7 in India, it is expected to launch next month (December 2015). Audi launched this latest all-new Q7 in Malaysia for RM 589,900 (Indian price of Rs. 91.06 lakh).
Story first published: Tuesday, November 24, 2015, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X