மஹிந்திராவின் புதிய எஸ்யூவியின் பெயர் வெளியீடு... ஜனவரி 15ல் ரீலிசாகிறது!

By Saravana

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவிக்கு கேயூவி100 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மினி எஸ்யூவி புத்தம் புதிய பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் விற்பனைக்கு வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவியின் கூடுதல் தகவல்கள், பெயர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய பெயர்

புதிய பெயர்

இதுவரை எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய மினி எஸ்யூவிக்கு கேயூவி100 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தனது பாரம்பரியப்படி, இந்த எஸ்யூவிக்கு கே டபுள் ஓ என்று அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது மஹிந்திரா. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி எஸ்யூவி மாடலாக வருகிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

K2 மற்றும் K2+ ஆகியவை பேஸ் வேரியண்ட்டுகளாகவும், K4 மற்றும் K4+ மிட் வேரியண்ட்டுகளாகவும், K6 மற்றும் K6+ உயர் வேரியண்ட்டுகளாகவும், K8 அதி உயர் வேரியண்ட்டாகவும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளும் ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

இந்த புதிய மினி எஸ்யூவியில் அலுமினிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் புத்தம் புதிய 1.2 லிட்டர் எம்ஃபால்கன் ஜி80 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், அதிகபட்சமாக 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பிஎஸ்-4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

டெல்லியில் விதிக்கப்பட்டிருக்கும் தடையால், மஹிந்திரா எஸ்யூவிகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த புதிய மினி எஸ்யூவி பெட்ரோல் மாடலில் வருவதும், சிறிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதும் அந்த நிறுவனத்தின் விற்பனை முற்றிலும் பூஜ்ய நிலையை எட்டாமல் தவிர்க்க உதவும்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியில் புதிய 1.2 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எம்ஃபால்கன் டீ75 என்று குறிப்பிடப்பட்டும் இந்த புதிய டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். இதுவும் பிஎஸ்-4 மாசு கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், ஏர்பேக்குகளும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

முன்பதிவு

முன்பதிவு

இந்த புதிய மினி எஸ்யூவிக்கு நாளை முதல் மஹிந்திரா டீலர்களில் முன்பதிவு துவங்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ஜனவரி 15ல் விற்பனைக்கு வரும் இந்த புதிய மினி எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra has revealed of its new mini suv called as KUV100 today.
Story first published: Friday, December 18, 2015, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X