மஹிந்திரா டியூவி300யை கஸ்டமைஸ் செய்து பெற்ற ஆனந்த் மஹிந்திரா!

Written By:

சொந்த உபயோகத்திற்காக ஒரு டியூவி 300 எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து பெற்றிருக்கிறார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த இந்த எஸ்யூவி, விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்தநிலையில், கஸ்டமைஸ் செய்யப்பட்ட டியூவி 300 எஸ்யூவியை டெலிவிரி பெற்றிருப்பதாக மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

கஸ்டமைஸ் செய்த மாடல்

கஸ்டமைஸ் செய்த மாடல்

பாசி பச்சை வண்ணத்திலான அந்த மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் பிரத்யேக பாடி கிட் ஒனறு பொருத்தப்பட்டு இருக்கிறது. பானட் ஸ்கூப் மற்றும் முன்புறம் பம்பர், பக்கவாட்டு பகுதியில் பெரிய வீல் ஆர்ச்சுகள், பிளாஸ்டிக் கிளாடிங் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற கூரையில் மார்க்ர் விளக்குகள் உள்ளன.

பேன்ஸி நம்பர்

பேன்ஸி நம்பர்

மராட்டிய பதிவு எண் கொண்ட ஆனந்த் மஹிந்திராவின் இந்த புதிய டியூவி 300 எஸ்யூவிக்கு 1555 என்ற பிரத்யேக நம்பரை வாங்கியுள்ளனர்.

கூடுதல் ஆக்சஸெரீகள்

கூடுதல் ஆக்சஸெரீகள்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு பல கூடுதல் ஆக்சஸெரீகளை வாடிக்கையாளர்களும் பெற முடியும். இந்த எஸ்யூவிக்கு மஹிந்திரா வழங்கும் க்ரோம் அலங்கார உதிரிபாகங்கள், மிதிவண்டிகளை எடுத்துச் செல்வதற்கான ஸ்டான்ட், பக்கவாட்டில் ஃபுட் ஸ்டெப் மற்றும் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், டேஷ்போர்டு அலங்காரம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி என்ற க்ளட்ச் பெடல் இல்லாத வசதியுடன் கூடிய புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைக்கிறது.

 விலை

விலை

ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கும் இந்த புதிய மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியை வாங்க விரும்புவோர்க்காக, தமிழக ஆன்ரோடு விலைகள் இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 நீங்களும் கஸ்டமைஸ் செய்யலாம்

ஆனந்த் மஹிந்திரா கஸ்டமைஸ் செய்தது போன்றே, நீங்களும் உங்களது மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து பெற முடியும். அதன் விபரங்கள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.

கஸ்டமைஸ் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி விபரம்

 
English summary
Anand Mahindra gets customized Mahindra TUV300 for his own use.
Story first published: Friday, November 27, 2015, 13:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark