பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார் அடிப்படையில் முதல் ஆப்பிள் கார் உருவாகிறது?

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் ஸ்மார்ட் கார் தயாரிப்பில் இறங்க திட்டமிட்டிருக்கிறது. தனது முதல் ஸ்மார்ட் காரை ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான, நடைமுறைகளில் ஆப்பிள் நிறுவனம் துரிதமாக செயல்பட்டு வருவதாக ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பிரபல வர்த்தக இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆப்பிள் சிஇஓ., ஆய்வு

ஆப்பிள் சிஇஓ., ஆய்வு

ஜெர்மனியிலுள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் ஐ3 காரின் தயாரிப்பு முறைகள் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ., நேரில் சென்று ஆய்வுகள் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆப்பிள் கார் பற்றிய செய்திகள் மீண்டும் ஊடகங்களில் றெக்கை கட்டி பறக்கின்றன.

புரொஜெக்ட் டைட்டான்

புரொஜெக்ட் டைட்டான்

புரொஜெக்ட் டைட்டான் என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் காரை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மேலும், அது ஒரு கார் மாடலாக இல்லாமல், மினி வேன் மாடலாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

 பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி

பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் காரின் உற்பத்தி, விற்பனை மற்றும் சர்வீஸ் போன்றவற்றிற்கு பிஎம்டபிள்யூவின் ஆலையையும், டீலர் மற்றும் சர்வீஸ் சென்டர்களையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறதாம். இதற்காகவே, ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ., டிம் குக் ஜெர்மனியின் லீப்சிக்கிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்.

 ஒப்பந்தம்

ஒப்பந்தம்

புதிய கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்காக பிஎம்டபிள்யூவுடன் ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகளில் ஆப்பிள் கார் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதாம். விரைவில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தானியங்கி கார்

தானியங்கி கார்

பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் மின்சாதன தொழில்நுட்பங்கள் மற்றும் கியர்பாக்ஸ் சிஸ்டம் போன்றவற்றை ஆப்பிள் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

இருதரப்புக்கும் பயன்

இருதரப்புக்கும் பயன்

ஆப்பிள் நிறுவனம் பிஎம்டபிள்யூவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்றே, பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கும் பயன் கிடைக்கும். அதாவது, ஆப்பிள் உருவாக்கி வரும் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை தனது கார்களில் பிஎம்டபிள்யூ பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறதாம்.

சந்தைப் போட்டி

சந்தைப் போட்டி

ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம், அடுத்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் தானியங்கி காரை சந்தையில் எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதே பிஎம்டபிள்யூவின் திட்டம்.

Most Read Articles
English summary
According to reports, Apple is considering the BMW i3 as a platform to build its first car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X