ஆடம்பர வசதிகள், புல்லட் ப்ரூப் வசதியுடன் பென்ஸ் லிமோசின் எஸ்யூவி!

Written By:

உலகின் சக்திவாய்ந்த சொகுசு எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவியின் லிமோசின் ரக மாடலை கனடாவை சேர்ந்த இன்காஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மிகச்சிறந்த பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் நிரம்பிய இந்த எஸ்யூவி கோடீஸ்வரர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடம்பர எஸ்யூவியின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமோசின் மாடல்

லிமோசின் மாடல்

சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவியை 43 இன்ச் கூடுதலாக நீட்டித்து இதனை லிமோசின் ரக மாடலாக மாற்றியுள்ளனர் இன்காஸ் கஸ்டமைஸ் நிறுவனத்தின் நிபுணர்கள். இதனால், கூடுதலாக ஒரு ஜன்னலும் கிடைத்திருக்கிறது.

 புல்லட் ப்ரூஃப் வசதி

புல்லட் ப்ரூஃப் வசதி

பயணிப்பவருக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் விதத்தில், இதன் பாடி, கண்ணாடிகள், விண்ட்ஷீல்டு போன்றவை குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சம் கொண்டது. குண்டு வெடிப்புகளின்போது உள்ளிருக்கும் பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத கீழ்பாகம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

உள்புறத்தில் சாய்மான வசதி கொண்ட லெதர் இருக்கைகள் உள்ளன. ஐபேட் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் விளக்குகளை ஒளிர விடுதல், கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்படுத்தும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

இந்த லிமோசின் ரக எஸ்யூவியில் சிறிய ஃப்ரிட்ஜ் கொண்ட மினி பார் உள்ளது. சேட்டிலைட் டிவி, தூய காற்றை கேபினுக்குள் சுத்திகரித்து வழங்கும் வசதி உள்ளிட்டவை உள்ளன.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.6.21 கோடி விலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்ஸ் கார்களின் ஆன்ரோடு விலை

பென்ஸ் கார்களின் ஆன்ரோடு விலை

பென்ஸ் கார்களின் சென்னை ஆன்ரோடு விலை

 
English summary
Inkas, a Canadian armored vehicle manufacturer has revealed its latest creation- an armoured, stretched Mercedes-Benz G63 AMG.This vehicle offers superior protection against bullets while the inside offers comforts that only a five star hotel could match.
Story first published: Wednesday, February 11, 2015, 13:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark