புதிய எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்திய அசோக் லேலண்ட்!

By Saravana

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த பஸ் மற்றும் விசேஷ வாகனஙகளுக்கான கண்காட்சியில், பேட்டரியில் இயங்கும் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடலை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அசோக் லேலண்ட் வெர்சா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல் புகை, சப்சம் இல்லாத வாகனமாக புரட்சி படைக்க வர இருக்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஆப்டேர் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்சை உருவாக்கியுள்ளது.


புகை, சப்தம் இருக்காது

புகை, சப்தம் இருக்காது

எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் இந்த புதிய பஸ்சிலிருந்து புகை மற்றும் சப்தம் இருக்காது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத மாடலாக இருக்கும். இது நகர்ப்புறத்துக்கு மிகவும் தேவையான எலக்ட்ரிக் பஸ் மாடலாக குறிப்பிடலாம்.

செயல்திறன்

செயல்திறன்

டீசல் பஸ் மாடல்களுக்கு இணையான செயல்திறனை இந்த பஸ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செயல்திறனில் சமசரசம் கொள்ள வேண்டியதில்லை.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த பஸ்சில் 44 பயணிகள் செல்லலாம். தாழ்தள வசதி கொண்ட இந்த பஸ் மாடலை மாநகர போக்குவரத்து, விமான நிலையங்களுக்கும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து, பணியாளர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

முதலீடு

முதலீடு

ரூ.246 கோடி முதலீட்டில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்சுக்கு தேவையான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிகளை சீனா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் அசோக் லேலண்ட் திட்டமிடப்பட்டுள்ளது.

 விற்பனை?

விற்பனை?

வரும் 2017ம் ஆண்டு இந்த புதிய பஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Ashok Leyland has unveiled its new fully-electric bus at the Bus & Special Vehicles Show organised by SIAM (Society of Indian Automobile Manufacturers). Called the Versa, the new bus was developed by Ashok Leyland's UK arm, Optare.
Story first published: Monday, January 19, 2015, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X