ஆடி ஏ3 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்

Written By:

ஆடி ஏ3 சொகுசு செடான் காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வந்த இந்த கார் தற்போது பெட்ரோல் மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆடி ஏ3 கேப்ரியோ பெட்ரோல் மாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாகவே, ஆடி ஏ3 காரிலும் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்துள்ளதாக ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் பெருமிதம் தெரிவித்தார். ஆடி ஏ3 பெட்ரோல் மாடலிலில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் படிக்கலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முக்கிய சிறப்பமசங்களில் முதன்மை பெறுவது 40.64 செமீ காஸ்ட் அலுமினியம் 15 இன்ச் அலாய் வீல்கள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் சைடு மிரர்கள், ஹாலஜன் விளக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இன்டிரியர்

இன்டிரியர்

லெதர் கவர் கொண்ட ஸ்டீயரிங் வீல், ரெகாட்டா லெதரேட் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உள்ளன. பிரிமியம் வேரியண்ட்டில், பிரத்யேக விளக்குகள், எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை மற்றும் க்ரோம் அலங்கார பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஆடி ஏ3 பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 180 எச்பி பவரையும், 250 டார்க்கையும் வழங்கும். இந்த காரில் எஸ் ட்ரோனிக் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் ஆற்றல் மறுசுழற்சி தொழில்நுட்பம் போன்ற சிறப்பு தொழில்நுட்பங்களை இந்த பெட்ரோல் மாடல் பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகச்சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்ட சொகுசு பெட்ரோல் மாடல்களில் ஒன்றாகவும் தன்னை முன்னிறுத்துகிறது ஆடி ஏ3 பெட்ரோல்.

வசதிகள்

வசதிகள்

டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட் சிஸ்டம், ரஃப் ரைடு என்ற விசேஷ சஸ்பென்ஷன், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் போன்ற பல வசதிகளை பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு நுட்பங்கள்...

பாதுகாப்பு நுட்பங்கள்...

ரியர் பாரக்கிங் சென்சார், ஏழு உயிர் காக்கும் காற்றுப் பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்ட்டி தெஃப்ட் வீல் போல்ட்டுகள் போன்றவை குறிப்பிட்டு கூற வேண்டிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

விலை

விலை

மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ரூ.25.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஆடி ஏ3 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 
English summary
Audi has launched their A3 sedan with an all-new variant for Indian market. The premium sedan will now be available with a powerful TFSI petrol engine with improved features making it an irresistible buy. A3 40 TFSI petrol variant has been priced at INR 25,50,000 ex-showroom, Mumbai and Delhi. It will now feature start/stop function along with energy recuperation system.
Story first published: Friday, September 4, 2015, 12:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark