ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

Written By:

மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ6 சொகுசு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய மாடலில் டிசைனிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மேட்ரிக்ஸ் ஹெட்லைட்

மேட்ரிக்ஸ் ஹெட்லைட்

இந்த புதிய மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமே, மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்ஸ் பொருத்தப்பட்டிருப்பதுதான். இது எதிரில் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சத்தை தராது என்பதுடன், அதிக பிரகாசத்தை அளிக்கும். இதுதவிர, டைனமிக் டர்ன் இண்டிகேட்டரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. புதிய முகப்பு க்ரில் அமைப்பு, மாற்றங்களுடன் கூடிய பம்பர், புதிய டெயில் க்ளஸ்ட்டர் போன்றவை இருக்கின்றன.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

இந்த புதிய மாடலில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் கன்ட்ரோல் மூலம் பின்புற பயணிகளும் மியூசிக் சிஸ்டத்தை இயக்கும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்டி- ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும், புதிய முன்புற இருக்கைகளும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. முந்தைய ஏ6 காரில் பயன்படுத்தப்பட்ட அதே 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் மற்றும் டிடிஐ டீசல் எஞ்சின்கள்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ரூ.49.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில், புதிய ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 
English summary
German luxury car maker Audi has launched the Audi A6 Matrix facelift model in India at Rs. 49.5 lakh (ex-showroom, Delhi).
Story first published: Thursday, August 20, 2015, 16:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark