கூகுள் காரின் பாதுகாப்பு அம்சம் குறித்து ஆடி கார் நிறுவனத் தலைவர் எச்சரிக்கை!

கூகுள் கார் உள்ளிட்ட தானியங்கி கார்களின் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தும் ஆபத்து இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க கம்ப்யூட்டர் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில், தானியங்கி கார்களில் இருக்கும் அடுத்து ஒரு பாதகமான அம்சம் குறித்து ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லெர் எச்சரித்துள்ளார்.

Google Car

பெர்லின் நகரில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில் ரூபர்ட் பேசுகையில்," இன்றைய காலக்கட்டத்தில் கார் என்பது பலருக்கும் இரண்டாவது வசிப்பிடம் போன்று மாறிவிட்டது.

எனவே, கார் மற்றும் அதனை பற்றியத் தகவல்கள் காரில் இருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால், அதிகரித்து வரும் தானியங்கி கார் திட்டங்களும், கார்களும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமைகளில் மூக்கை நுழைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தானியங்கி கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நகர்வை எளிதாக கண்காணிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தானியங்கி கார்களின் வேகம் மற்றும் இருப்பிடம் போன்ற தகவல்களை அந்த காரின் சாஃப்ட்வேர் மூலமாக சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனம், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எளிதாக பெற்றுக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன," என்று கருத்து கூறியுள்ளார்.

இதனால், தானியங்கி கார்கள் மீதான பாதுகாப்பு அம்சங்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதே மாநாட்டில் கூகுகள் தலைவர் எரிக் ஷ்மிடிட்டும் கலந்து கொண்டதால், ஆடி கார் நிறுவன தலைவரின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆடி கார் நிறுவனமும் ஓட்டுனர் உதவியில்லாமல், சாஃப்ட்வேர் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்களை தீவிரமாக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Volkswagen's Audi will take a stringent line on guarding customers' data, the carmaker's chief executive said on Tuesday, in a thinly veiled swipe at new rival Google.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X