ஆடி ஏ3 கேப்ரியோ சொகுசு காரின் 8 சீட்டர் மாடல் வெளியீடு!

Written By:

ஆடி கார் நிறுவனம் ஓர் வித்தியாசமான திறந்த நிலை சொகுசு காரை அறிமுகம் செய்துள்ளது. ஆடியின் பிரபலமான சொகுசு கார் மாடலான ஏ3 காரின் 8 சீட்டர் மாடலாக இது வெளியிடப்பட்டிருக்கிறது.

சட்டை அளவு போன்றே, இந்த காருக்கு ஆடி ஏ3 XXL என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மிக அசத்தலான இந்த கார் மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆடி ஏ3 XXL

ஆடி ஏ3 XXL

இரண்டாம் தலைமுறை ஆடி ஏ3 காரின் திறந்த நிலை மாடலின் அடிப்படையிலான 8 சீட்டர் காராக மாற்றியிருக்கின்றனர். ஆடி ஏ3 கேப்ரியோ காரில் கூடுதலாக இரண்டு வரிசை சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த காரின் சேஸீயின் உறுதித்தன்மை எந்தளவு இருக்கும் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

சாலையில் இயக்குவதற்கான அனுமதி இல்லை என்று ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இது காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

கதவுகள்

கதவுகள்

சாதாரண 2 கதவுகள் கொண்ட மாடலில் கூடுதலாக 4 கதவுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 6 கதவுகள் கொண்ட ஆடி ஏ3 மாடலாக மாற்றப்பட்டிருக்கிறது.

நோக்கம்

நோக்கம்

இந்த காரை உற்பத்திக்கு கொண்டு செல்லும் நோக்கம் இல்லை என்றும், ஆடி ஏ3 கேப்ரியோ மாடலை பிரபலப்படுத்தும் நோக்கத்திலேயே, இந்த காரை தயாரித்துள்ளதாக ஆடி கூறியிருக்கிறது.

பயிற்சி மாணவர்கள்

பயிற்சி மாணவர்கள்

ஆடி கார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், இந்த காரை உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த தகவல் இல்லை.

 
English summary
German luxury car maker Audi has revealed photos of a unique XXL A3 cabriolet to its Facebook page.
Story first published: Thursday, August 27, 2015, 11:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark