ஆடி ஆர்8 எல்எம்எஸ் கோப்பை பயிற்சி பந்தயத்தில் ஆதித்யா பட்டேல் முதலிடம்!

By Saravana

னாவில் நடக்க இருக்கும் ஆடி ஆர்8 எல்எம்எஸ் கோப்பை கார் பந்தயத்திற்காக நடந்த பயிற்சி பந்தயத்தில் இந்திய வீரர் ஆதித்யா பட்டேல் முதலிடம் பிடித்தார்.

இந்த போட்டிக்கான பிரதான போட்டி சீனாவிலுள்ள ஸுகாய் நகரில் வரும் 21ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக, நேற்று நடந்த இறுதிச் சுற்றுக்கு முந்தைய பயிற்சி சுற்றில் ஆதித்ய பட்டேல் இலக்கு வைக்கப்பட்ட தூரத்தை 1.34.985 மணிநேரத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

Aditya Patel

முதல்முறையாக இந்த ரேஸ் டிராக்கில் களமிறங்கிய ஆதித்ய பட்டேல் முதலிடத்தை பிடித்து அசத்தினார். இந்த ரேஸ் டிராக்கில் ஏற்கனவே பரிட்சயம் உள்ள ரஹேல் ப்ரே மற்றும் மார்ச்சி லீ ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

பரிட்சயமில்லாத இந்த ரேஸ் டிராக்கில் முதலிடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி தருவதாகவும், வார இறுதியில் நடைபெற இருக்கும் பிரதான போட்டியை ஆவலாக எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆடி இந்தியாவின் கார் பந்தய வீரரும், சென்னையை சேர்ந்த இளம் கார் பந்தய வீரரான ஆதித்யா பட்டேலுக்கு ஆடி இந்தியா கார் நிறுவனம், ஜேகே டயர்ஸ், அமன்த் மற்றும் ஜூப்லியன்ட் மோட்டார் ஒர்க்ஸ் ஆகியவை ஸ்பான்சர் மற்றும் ஆதரவை வழங்கியுள்ளன.

ஆடி நிறுவனத்தின் சீனப் பிரிவால் நடத்தப்படும் இந்த ஆடி ஆர்8 எல்எம்எஸ் கோப்பை சீனாவின் ஸுகாய் நகரில் துவங்கி, கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

Most Read Articles
English summary
Audi India, the leading luxury car manufacturer has today announced that it’s race talent Aditya Patel has topped the pre-season test session of the Audi R8 LMS Cup 2015 held in Zhuhai, China. Aditya, who is marking his debut on the Zhuhai racetrack, put in an extremely impressive performance over two days to take the pole position. He raced ahead of seasoned racers such as Rahel Frey, Marchee Lee and Frankie Cong fu Chen with an impressive lap time of 1.34.985. The Audi R8 LMS Cup is starting its fourth season at Zhuhai, South China on March 21, 2015.
Story first published: Thursday, March 19, 2015, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X