மகளிர் தின ஸ்பெஷல்: ஆடி கார்களில் ஆஃப்ரோடு வித்தைகளை கற்ற பெண்கள்!

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிர் தினத்தையொட்டி, ஆடி வுமன்ஸ் பவர் டிரைவ் என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக டெஸ்ட் டிரைவ் மற்றும் ஆஃப்ரோடு அனுபவ நிகழ்ச்சியை ஆடி கார் நிறுவனம் பெங்களூரில் இன்று நடத்தியது. தேவனஹள்ளி விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கும் கிளார்க்ஸ் எக்ஸோடிக்கா சுவிஸ் டவுனில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆடி நிறுவனத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்த பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் பெண்கள் ஆடி நிறுவனத்தின் பல்வேறு கார்களின் உச்சபட்ச தொழில்நுட்ப திறன்களை அறிந்து கொள்ளும் விதத்தில் செயல்விளக்க நிகழ்ச்சியாக இது அமைந்தது.


 பெங்களூரில் முதல் முறை

பெங்களூரில் முதல் முறை

கடந்த 2012ம் ஆண்டு முதல்முறையாக மகளில் தினத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் ஆடி கார் நிறுவனம் நடத்தியது. இந்த நிலையில், தென் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் ஆடி வுமன்ஸ் பவர் டிரைவ் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு ஆடி கார்களை ஓட்டி மகிழ்ந்ததோடு, வியப்பையும் தெரிவித்தனர்.

ஆடி கார்கள்

ஆடி கார்கள்

ஆடி நிறுவனத்தின் எஸ்யூவி வகை வாகனங்களான ஆடி க்யூ3, ஆடி க்யூ5 மற்றும் க்யூ7 ஆகிய எஸ்யூவிகள் மற்றும் ஆடி ஏ3, ஆடி ஏ4 மற்றும் ஆடி ஏ6 ஆகிய சொகுசு செடான் கார்களை ஆடியின் சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்த பெண்கள் ஓட்டி மகிழ்ந்தனர்.

ஆஃப்ரோடு களம்

ஆஃப்ரோடு களம்

கிளார்க்ஸ் எக்ஸோடிகா சுவிஸ் டவுன் ரெசார்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக ஆஃப்ரோடு களத்தில் ஆடி கார்களை பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழில்நுட்பங்களின் வித்தகம்

தொழில்நுட்பங்களின் வித்தகம்

இந்த ஆஃப்ரோடு களத்தில் ஆடி கார்களில் இருக்கும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் வசதி போன்றவற்றின் பயன்களை வெகுவாக உணர்ந்ததாக காரை ஓட்டிய பெண்கள் தெரிவித்தனர்.

பயிற்றுனர்கள் உதவியுடன்...

பயிற்றுனர்கள் உதவியுடன்...

ஆடி நிறுவனத்தின் சான்று பெற்ற பயிற்றுனர்கள் உதவி மற்றும் ஆலோசனையின்படி, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் ஆடி கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். மேலும், சிலர் சரிவாக அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டில் ஏறி, இறங்கியபோது வியப்பையும், த்ரில்லான அனுபவத்தை பெற்றதாக தெரிவித்தனர்.

ஆடி ஆர்8 காரின் தரிசனம்

ஆடி ஆர்8 காரின் தரிசனம்

இந்த நிகழ்ச்சியில் ஆடியின் ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடலான ஆடி ஆர்8 காருடன் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் ஆடி ஆர்8 காரை வியந்து போற்றியதுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டினர்.

தொழில்நுட்பங்களின் செயல் விளக்கம்

தொழில்நுட்பங்களின் செயல் விளக்கம்

ஒவ்வொரு தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளையும், பயன்களையும் விளக்கும் வகையில், ஆஃப் ரோடு கள பாதையில் செயல்விளக்க பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இது காரை ஓட்டுபவர் அதன் பயனை எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்தது.

ஆடி கார்களின் சங்கமம்

ஆடி கார்களின் சங்கமம்

ஒரே இடத்தில் ஆடி நிறுவனத்தின் ஆர்8, ஆர்எஸ்5 உள்ளிட்ட அனைத்து கார்களையும் பார்த்து வந்திருந்த பெண்களும், பார்வையாளர்களும் பேரின்பம் அடைந்தனர்.

Most Read Articles
English summary
German luxury car maker Audi has organised the Audi women's power drive in Bangalore to celebrate women's day. This was an exclusive program to give women enthusiasts a chance to experience the driving pleasure of the Audi range of cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X