இந்தியாவில் ஆடி ஆர்எஸ்6 அவான்த் ஸ்டேஷன் வேகன் மாடல் அறிமுகம்!

Written By:

ஆடி கார் நிறுவனத்தின் ரொம்பவே ஸ்பெஷலான மாடல் ஒன்றை இந்தியாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் இந்த புதிய ஆடி ஆர்எஸ்6 அவான்த் காரை ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஆகியோர் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்தனர்.

ஸ்டேஷன் வேகன் பாடி ஸ்டைல் கொண்ட இந்த கார் இந்தியாவிற்கு ஒரு புதிய வகை சொகுசு கார் மாடலாக வந்திருக்கிறது. சொகுசு கார் மார்க்கெட்டில் இந்த வகை பாடி ஸ்டைல் கொண்ட மாடலை எந்தவொரு கார் நிறுவனமும் இந்தியாவில் விற்பனை செய்யவில்லை.

இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்தியாவில் ஆடி ஆர்எஸ்6 அவான்த் கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இப்போது இந்த செக்மென்ட்டில் ஒரு மாடல் கூட இல்லை என்பதால், ஆடி கார் நிறுவனம் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஸ்டேஷன் வேகன் பாடி ஸ்டைல் கொண்ட இந்த காருக்கு எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படி வரவேற்பு கிடைத்தால், பிற சொகுசு கார் நிறுவனங்களும் இந்த மார்க்கெட்டின் மீது கவனம் செலுத்தலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

ஆடி ஆர்எஸ்6 அவான்த் காரில் 567 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கக்கூடிய வல்லமை கொண்ட 4.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும். இது ஆடியின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் தொட்டுவிடும் என்பதோடு, அதிகபட்சமாக மணிக்கு 304 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வல்லமை கொண்டது. ஆனால், இந்தியாவில் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

மேட்ரிக்ஸ் எல்இடி லைட் சிஸ்டம்

20 இன்ச் அலாய் வீல்கள்

ஆர்எஸ் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன்

கருப்பு நிற லெதர் அப்ஹோல்ஸ்டரி

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் போன்ற பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த கார் கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.1.35 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஆடி ஆர்எஸ்6 அவான்த் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  
மேலும்... #ஆடி #audi
English summary
Audi has launched the RS6 Avant in India. This is the German carmaker's first performance station wagon in India. Audi is aiming to retain the number one spot in the luxury car segment in India.
Story first published: Thursday, June 4, 2015, 12:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark