புதிய ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்... நிகழ்ச்சியிலிருந்து நேரடி தகவல்கள்!!

Written By:

புதிய தலைமுறை ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் ஆடியின் புதிய இலகு எடை கட்டமைப்பு கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே, பிஎம்டபிள்யூ இசட்4 மற்ரும் போர்ஷே பாக்ஸ்டர் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய தலைமுறை மாடலில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய தலைமுறை ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட நீளத்திலும், அகலத்திலும் கூடியிருக்கிறது. பின்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆடியின் இலகு எடை புதிய ஸ்பேஸ் ஃப்ரேம் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் முந்தைய மாடலைவிட 50 கிலோ எடை குறைவானது.

 வடிவம்

வடிவம்

புதிய தலைமுறை ஆடி டிடி கார் 4,180மிமீ நீளமும், 1,832மிமீ அகலமும், 1,353மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் பூட்ரூம் கொள்ளளவு 13 லிட்டர்கள் அதிகரிக்கப்படிருப்பதால், தற்போது 305 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமை பெற்றிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

ஆடி நிறுவனத்தின் மேட்ரிக்ஸ் எல்இடி விளக்குகளுடன் வந்திருக்கும் அடுத்த ஆடி மாடல். ஏற்கனவே, ஆடி ஏ8 மாடலில் மட்டுமே வருகிறது. இன்டிரியரில் புதிய 12.3 இன்ச் என்விடியா டெக்ரா 30 ஜிபியு கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தின் டர்பைன் பிளேடு போன்ற ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.12 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சென் மியூசிக் சிஸ்டம் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருந்த அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய தலைமுறை மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 227 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் உள்ளது.

செயல்திறன்

செயல்திறன்

ஆடியின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு 5.6 வினாடிகளை எடுத்துக் கொள்ளும். மணிக்கு 243 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. லிட்டருக்கு 14.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

புதிய தலைமுறை ஆடி டிடி கார் இந்தியாவில் ரூ.60.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

 பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

ஆடி டிடி காரின் சக்திவாய்ந்த மற்றொரு மாடலான ஆடி டிடிஎஸ் மாடல் இந்தியாவில் பின்னர் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாடல் 295 பிஎச்பி சக்திகொண்டதாக இருக்கும்.

மூன்று தலைமுறை மாடல்கள்

மூன்று தலைமுறை மாடல்கள்

மூன்று தலைமுறை ஆடி டிடி கார்கள் நிகழ்ச்சியில் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. படத்திலிருக்கும் நீல வண்ணம் கொண்ட கார் முதலாம் தலைமுறை ஆடி டிடி. ஆரஞ்ச் வண்ணத்திலிருப்பது இரண்டாம் தலைமுறை. சிவப்பு வண்ணத்தில் இருப்பது மூன்றாம் தலைமுறை மாடல்.

நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி

நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி

புதிய ஆடி டிடி கார் அறிமுக நிகழ்ச்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியும் கலந்துகொண்டார். அவருடன் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா.

 
English summary
Audi India has just launched its all new sportscar the TT Coupe. It is the third generation sports Coupe that has been introduced for Indian market. 2015 TT Coupe by Audi looks better and sharper than its predecessor. The German manufacturer has maintained interior as well as exterior styling of their Sports Coupe in India.
Story first published: Thursday, April 23, 2015, 13:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark