பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

Written By:

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் சொகுசு காரை வி.ஐ.பி.,கள் மட்டுமே கொண்ட பிரத்யேக நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் உள்ள சன்செட் மார்குவிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

பென்ட்லீ நிறுவனத்தால், ஃபர்ஸ்ட் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யபட்ட இந்த மாடல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வரும் லிமிடேட் எடிசன் காராக அறிமுகம் செய்யபடுகிறது.

பிரத்யேக மாடல்

பிரத்யேக மாடல்

இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலில், 608 கார்களை மட்டுமே தயாரிக்க பென்ட்லீ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் கார்களை வாங்கும் வாடியாக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் ப்ரீட்லிங் கிரோனோகிராஃப்ஸ் கடிகாரங்களின் மூன்று மாடல்களில், ஏதேனும் ஒரு மாடல் கடிகாரம் வழங்கப்பட உள்ளது.

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் தான், பென்ட்லீ பென்டைகா நிறுவனத்தின் மூலம் விற்கப்படும், முதல் சொகுசு எஸ்யூவி கார் ஆகும்.

செயல்திறன்

செயல்திறன்

நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இது அதிகப்படியாக மணிக்கு 301 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டள்ளது.

பிரத்யேக வண்ணங்கள்

பிரத்யேக வண்ணங்கள்

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார்கள், 10 பிரத்யேக வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

அதே போல், வாடிக்கையாளர்களின் தேர்வுக்கும், ரசனைக்கும் ஏற்ப பல்வேறு சொகுசு அம்சங்களுடன் இண்டீரியர்களும் வடிவமைத்து தரப்படுகிறது.

மேலும், இதில் இல்லூமினேட்டட் டிரட் பிளேட்கள், யூனியன் ஜேக் பேட்ஜ்கள், க்ரோம் சைடு பீடிங் மற்றும் பிளாக் நிறத்தில் பெயிண்ட் மற்றும் பாலிஷ் செய்யபட்ட 22 இஞ்ச் வீல்கள் கொண்டுள்ளன.

இன்டீரியர்

இன்டீரியர்

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் காரின் இண்டீரியரில், பெஸ்போக் ஆம்பியண்ட் லைட்டிங், பிரத்யேகமான காண்டிராஸ்ட் தையல் வேலைபாடுகள், எம்ப்ராய்டிங் செய்யபட்ட சீட்கள், யூனியன் ஜேக் ஃபேஷியா பேட்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த புதிய ஃபர்ஸ்ட் எடிஷன் பென்டைகா நல்ல பிரிமியம் காராகவும், வாடிக்கையாளர்களுக்கு நல்ல சொகுசு காராகவும் விளங்கும் என தெரிகிறது.

மேலும், இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் கார் தான், வருங்கால எஸ்யூவி-களுக்கு பெஞ்ச்மார்க் எனப்படும் முன்மாதிரி மாடலாக விளங்க உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன், 6.0 லிட்டர் டபுள்யூ12, ட்வின்-டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 600 பிஹெச்பி-யையும், 900 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை

விலை

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார், 2,97,000 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் 1.95 கோடி ரூபாய் விலையில் கிடைக்க உள்ளது.

பென்ட்லீ பென்டைகா ஸ்டாண்டர்ட் வெர்டிஷன் கார்கள் 2,29,100 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாய் விலையில் கிடைக்கின்றது.

மிக விலை உயர்ந்த எஸ்யூவி

மிக விலை உயர்ந்த எஸ்யூவி

பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் அறிமுகத்தை அடுத்து, உலக அளவில் மிக விலை உயர்ந்த எஸ்யூவி காராக, பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bentley Bentayga First Edition Luxury SUV was Unveiled To Customers in Los Angeles. In this First Edition Luxury SUV Car Model, only 608 Cars are to be made by Bentayga. Bentley gifts each of their customers, with either one of three special edition Breitling Chronographs Clocks.
Story first published: Saturday, November 21, 2015, 11:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark