உலகின் அதிவேக எஸ்யூவி பென்ட்லீ பென்டைகா விபரங்கள், படங்கள் வெளியானது!

Written By:

பென்ட்லீ நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய சொகுசு எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதான் உலகின் மிகவும் அதிவேகமான எஸ்யூவியாகவும், விலை அதிகமான எஸ்யூவி மாடலாகவும் இருக்கும். அதிகாரப்பூர்வ தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 15ந் தேதி பிராங்க்ஃபர்ட் நகரில் துவங்க இருக்கும் ஆட்டோ ஷோவில், புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 600 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவியில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும், இதனுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய சொகுசு எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 301 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. இதன்மூலம், உலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமையை பெற இருக்கிறது.

ஆஃப்ரோடு தொழில்நுட்பம்

ஆஃப்ரோடு தொழில்நுட்பம்

சாதாரண சாலைகள் மற்றும் கரடு முரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்த காரில் டிரைவ் டைனமிக்ஸ் மோடு டயல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டயலில் விருப்பம் போல் எளிதாக தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக இயங்கும் எலக்ட்ரானிக் நைட் விஷன் அசிஸ்ட் மற்றும் ஹெட் அப் டிஸ்ப்ளே ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

பிரிமியம் லெதர் மற்றும் மரவேலைப்பாடுகளால் இன்டிரியர் இழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்டிரியரின் ஒவ்வொரு பகுதியும் பயணிகளுக்கு மிகச்சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சம்

பொழுதுபோக்கு அம்சம்

இந்த காரில் 10.2 இன்ச் திரையுடன் கூடிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இரு்ககும். இது 4ஜி இணைப்பில் இயங்கும். மேலும், இந்த எஸ்யூவியில் 950 வாட்ஸ் திறன் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

விற்பனை?

விற்பனை?

விரைவில் துவங்க இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் இந்த புதிய சொகுசு எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. அதன்பிறகு, சாலைகளில் தனி முத்திரை பதிக்கும் எஸ்யூவியாக வலம் வர துவங்கும்.

 
English summary
Bentley has been teasing the world with their SUV for a while now. They have finally revealed interior and exterior images of their Bentayga. Also provided to us is technical details of their SUV.
Story first published: Wednesday, September 16, 2015, 10:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark