இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்ட்லீ பென்டைகா... மான் வேட்டைக்கு செல்ல பயன்படுத்துவார்!!

By Saravana

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு முதல் பென்ட்லீ பென்டைகா டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. அதனை அவர் வேட்டைக்கு செல்ல பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்ட அனைத்து எஸ்யூவிகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாம். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உலகின் அதிவேக எஸ்யூவி

உலகின் அதிவேக எஸ்யூவி

உலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமையுடன் பென்ட்லீ பென்டைகா மார்க்கெட்டுக்கு வருகிறது. இந்த எஸ்யூவி சொகுசு வசதிகளிலும், செயல்திறனிலும் ஓர் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதால், முன்பதிவு செய்ய கடும் போட்டி இருந்து வருகிறது.

உற்பத்தி இலக்கு

உற்பத்தி இலக்கு

ஆண்டுக்கு 4,500 பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிகள் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்பதிவு செல்லும் போக்கை பார்த்தால், காத்திருப்பு காலம் ஓர் ஆண்டை விடவும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இதனால், பல கோடீஸ்வரர்கள் கையை பிசைந்து கொண்டு விரக்தியில் நிற்கின்றனர்.

டெபாசிட்

டெபாசிட்

இந்திய மதிப்பில் ரூ.1.60 கோடி டெபாசிட் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி முன்பதிவு செய்தாலும், இப்போது உள்ள நிலவரப்படி, 2017ம் ஆண்டில்தான் கார் டெலிவிரி கிடைக்கும்.

 முதல் வாடிக்கையாளர்

முதல் வாடிக்கையாளர்

முதலாவதாக தயாரிக்கப்பட உள்ள ஒன்றாம் எண் கொண்ட பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டதாக பென்ட்லீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வோல்ஃப்கேங் டர்ஹைமர் உறுதி செய்துள்ளார். இந்த எஸ்யூவியை ராணி வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வேட்டைக்கு செல்லும் பென்டைகா...

வேட்டைக்கு செல்லும் பென்டைகா...

ஸ்காட்லாந்தில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு சொந்ததமாக பல்மோரல் ஹாலிடே எஸ்டேட் உள்ளது. கோடை காலத்தில் இரண்டாம் எலிசபெத் இங்கு விடுமுறையை கழிக்க வருவார். அப்போது, பாரம்பரிய வழக்கப்படி, வேட்டைக்கு செல்வர். அப்போது, இந்த எஸ்யூவியை பயன்படுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொகுசு எஸ்யூவி

சொகுசு எஸ்யூவி

உலகின் மிகவும் சொகுசு அம்சங்கள் நிறைந்த, சக்திவாய்ந்த எஸ்யூவி மாடலாக வருகிறது. இந்த எஸ்யூவி உருவத்தில் மிரட்டலாகவும், உயர்தர இன்டிரியர் கொண்டதாகவும் வருகிறது. மேலும், இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் மணிக்கு 301 கிமீ வேகம் வரை தொடச் செய்யும் வல்லை கொண்டது.

பென்ட்லீ கார்கள்

பென்ட்லீ கார்கள்

2002ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பென்ட்லீ ஸ்டேட் லிமோசின் கார் பரிசளிக்கப்பட்டது. அடுத்து ஒரு பென்ட்லீ முல்சான் காரும் அவரது கராஜில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

லேண்ட்ரோவர் டிஃபென்டர்

லேண்ட்ரோவர் டிஃபென்டர்

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதும், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பென்ட்லீ பென்டைகா பக்கம் தங்களது கவனத்தை திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
According to reports,The Bentley Bentayga has already been sold out for the first year of production.
Story first published: Friday, September 18, 2015, 14:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X