பென்ட்லீயின் மிரட்டலான முதல் ஆடம்பர எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது

Posted By:

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய பென்ட்லீ எஸ்யூவியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீ முதல்முறையாக எஸ்யூவி மாடல் ஒன்றை தயாரித்து வருகிறது.

Bentley Bentayga
 

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த புதிய எஸ்யூவியின் டீசரை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. படு மிரட்டலாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை உண்டு பண்ணியிருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியின் பெயரை டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பென்ட்லீ கார் நிறுவனம் அறிவிக்க இருக்கிறது. இந்த புதிய ஆடம்பர எஸ்யூவிக்கு பென்டைகா என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென்ட்லீ நிறுவனர் பெயர் மற்றும் மரங்கள் நிறைந்த குளிர்ப்பிரதேசத்தை குறிக்கும் டைகா என்ற கடுமையான சீதோஷ்ண நிலையை குறிக்கும் வகையில், இந்த பெயரை தெரிவு செய்துள்ளதாம். இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஆடம்பர எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, இந்த புதிய ஆடம்பர எஸ்யூவியை வாங்குவதற்கு இதுவரை 4,000 முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
British luxury car maker Bentley has decided to announce the name of its upcoming SUV will be: Bentayga. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark