சிறந்த கையாளுமை கொண்ட இந்திய கார் மாடல்கள்!

Written By:

கார்களை தேர்வு செய்யும்போது, சிறந்த ஓட்டுதல் தரம் கொண்ட கார்களை தேர்வு செய்வதற்கு கார் பிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது அச்சமில்லாத உணர்வை தரும் மாடல்களை அவர்கள் பரிந்துரைப்பதும், வாங்குவதையும் கண்டிருக்கிறீர்கள்.

அடிப்படையில், சிறப்பான கையாளுமைக்கு அந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பும், ஸ்டீயரிங் சிஸ்டத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், இரண்டுமே சிறப்பாக அமைந்த கார்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஃபியட் புன்ட்டோ எவோ

01. ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் கார்கள் கையாளுமைக்கு பெயர் போனவை. அந்த விதத்தில், ஃபியட் புன்ட்டோ எவோ கார் சிறந்த கையாளுமை கொண்ட ஹேட்ச்பேக் மாடல். எனவே, இந்த காருக்கு கார் பிரியர்கள் மத்தியில் தனி மதிப்பு இருந்து வருகிறது. மேலும், மோசமான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஹேட்ச்பேக் கார் மாடல் என்பதுடன், கட்டுமானத் தரத்திலும் உயர்வான கார். ஆனாலும், ஃபியட் நிறுவனத்தின் விற்பனை கொள்கைகளால் பின்தங்கி இருக்கிறது.

02. ஃபோக்ஸ்வேகன் போலோ

02. ஃபோக்ஸ்வேகன் போலோ

சிறந்த கட்டுமானத் தரம் மட்டுமின்றி, கையாளுமையில் ஓர் சிறந்த ஹேட்ச்பேக் கார் ஃபோக்ஸ்வேகன் போலோ கார். ஓட்டுதல் தரம், கையாளுமை என இரண்டிலும் வாடிக்கையாளர்களிடம் பெயர் பெற்ற மாடல். சர்வீஸ் நெட்வொர்க் பிரச்னையால் பின்தங்கி இருக்கிறது.

03. ஃபோர்டு ஃபிகோ

03. ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு கார்கள் சிறந்த கையாளுமைக்கு பெயர் பெற்றவை. குறிப்பாக, அதிவேகத்தில் இந்த கார்களின் ஸ்டீயரிங் ஓட்டுனருக்கு மிக தன்னம்பிக்கையை அளிக்கும் விதத்தில் கடினமாக மாறிவிடும். அத்துடன், இந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பும் சிறப்பான ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையையும் வழங்கும். மைனஸ் பாயிண்ட்டுகளை தாண்டி ஃபோர்டு கார்களை சிலர் மீண்டும் மீண்டும் தேர்வு செய்வதற்கான ரகசியம் இதுதான். ஆனால், இன்னும் சில மாதங்களில் புதிய ஃபிகோ வர இருப்பதையும் மனதில் கொள்வது அவசியம்.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி கார்களை 'லேசாக' எடை போட்டவர்களின் வாயை அடைத்த கார் மாடல். டிசைன், தரமான பாகங்கள் மட்டுமல்ல, கையாளுமையில் வெகு ஜோரான கார். நெடுஞ்சாலைகளில் பல ஸ்விஃப்ட்டுகள் ஓவர்டேக் செய்து பறப்பதே இதற்கு அத்தாட்சி. அந்தளவுக்கு ஓட்டுனருக்கு நம்பிக்கையை வழங்கக்கூடிய மாடல் இது. மேலும், அதிவேகத்தில் மிகுந்த நிலைத்தன்மையுடன் செல்லும் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டது. இதனாலேயே பல லட்சோப லட்சம் இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.

01. டாடா ஸெஸ்ட்

01. டாடா ஸெஸ்ட்

இந்திய சாலைகளுக்கு ஏற்ற காம்பேக்ட் செடான். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. டாடா பேட்ஜ் இல்லாமல் இருந்திருந்தால் இந்த காரின் விற்பனை நிச்சயம் நல்ல நிலைக்கு சென்றிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது அச்சமில்லாத உணர்வை தரும் மாடல்களில் ஒன்று.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

ஸ்விஃப்ட் காரின் அளவு எதிர்பார்க்க இயலாது. அதேநேரத்தில், இதன் சஸ்பென்ஷன் அமைப்பு வேகத்தடைகளை கண்டு அஞ்ச வேண்டிய நிர்பந்தத்தை தவிர்க்கிறது. கையாளுமையில் சிறப்பான மாடல்களில் ஒன்று.

01. ஸ்கோடா ரேபிட்

01. ஸ்கோடா ரேபிட்

கட்டுமானத் தரத்திலும், கையாளுமையில் சிறந்த மிட்சைஸ் செடான் கார். ஸ்டீயரிங் சிஸ்டத்தின் செயல்திறனும், இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் இணைந்து ஓட்டுபவரை குதூகலிக்கச் செய்யும். இதன் ரீபேட்ஜ் மாடலான ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரும் கையாளுமையில் திருப்தி தரும் மாடலாக இருக்கிறது.

02. ஃபியட் லீனியா

02. ஃபியட் லீனியா

கையாளுமை என்றவுடன் கார் பிரியர்களுக்கு ஃபியட் கார்கள்தான் நினைவுக்கு வரும். அந்தளவு சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பையும், ஸ்டீயரிங் சிஸ்டத்தையும் பெற்றிருக்கக்கூடிய சிறந்த மிட்சைஸ் செடான் ஃபியட் லீனியா. ஆனாலும், போட்டி நிறைந்த இந்திய மார்க்கெட்டில் இந்த காருக்கு ஓர் நல்ல இடம் கிடைக்காதது துரதிருஷ்டவசமானது.

01. ரெனோ டஸ்ட்டர்

01. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் வெற்றிக்கு பல காரணங்களில் ஒன்று சிறந்த கையாளுமை கொண்ட எஸ்யூவி மாடல். நகரச் சாலைகள், நெடுஞ்சாலைகள், கரடு முரடான சாலைகள் என அனைத்திலும் இந்த எஸ்யூவி எளிதாக எதிர்கொள்ளும். அதற்கு ஏற்ப நல்ல சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் ரீபேட்ஜ் மாடாலான நிசான் டெரானோவும் மற்றொரு ஆப்ஷன்.

02. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

02. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

டிசைனில் மட்டுமல்ல, ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் ஓர் சிறப்பான அனுபவத்தை தரும் மினி எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். ஃபோர்டு கார்களுக்கே உரிய சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பை பெற்று கையாளுமையில் ஜோரான மாடலாக விளங்கி வருகிறது.

 
English summary
Best Handling Cars In India.
Story first published: Friday, July 31, 2015, 10:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark