இந்த ஆண்டு விடைபெறும் கார் மாடல்கள் - முன்பதிவு செஞ்சிடாதீக!!

Written By:

விற்பனையில் சொதப்பி வரும் சில கார் மாடல்களுக்கு விடை கொடுக்கவும், புதிய மாடல்களின் வருகையையொட்டி சில கார் மாடல்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட உள்ளன.

அதுபோன்று, இந்த ஆண்டு இந்தியாவில் விடைபெறும் சில பிரபல கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியுள்ளோம். புதிய கார் வாங்குபவர்கள் இந்த மாடல்களை தவிர்ப்பது நலம் தரும். கவர்ச்சிகர சலுகைகளை நம்பி ஏமாந்துவிடாமல் இந்த கார்களை தவிர்ப்பது எதிர்காலத்தில் நன்மையை தரும்.

 01. ஃபோர்டு ஃபிகோ

01. ஃபோர்டு ஃபிகோ

இந்தியர்களின் ரசனைக்கு தீனி போட்ட மாடல்களில் ஒன்றான ஃபோர்டு ஃபிகோ கார். புதிய தலைமுறை மாடல் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால், இந்த ஃபிகோ கார் விற்பனை நிறுத்தப்பட உள்ளது. எனவே, ஃபிகோ பிராண்டை விரும்புபவர்கள் ஒரு சில மாதங்கள் பொறுத்திருந்து புதிய தலைமுறை மாடலை வாங்குவது உத்தமம். புதிய மாடலும் பெட்ரோல், டீசல் என இரு ஆப்ஷனிலும், முற்றிலும் புதிய டிசைனில் வர இருக்கிறது.

02. ஃபோர்டு கிளாசிக்

02. ஃபோர்டு கிளாசிக்

மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக இருந்து வரும் ஃபோர்டு கிளாசிக் காரும் விரைவில் விடைபெறுகிறது. புதிய தலைமுறை ஃபிகோ காரின் அடிப்படையிலான ஆஸ்பயர் என்ற புதிய காம்பேக்ட் செடான் கார் இந்த காருக்கு மாற்றாக வருவதால் விற்பனை நிறுத்தப்பட உள்ளது.

 03. டாடா விஸ்டா

03. டாடா விஸ்டா

இடவசதி மிக்க டாடா விஸ்டா காரின் விற்பனையும் சரியில்லை என்பதுடன், புதிதாக வந்திருக்கும் போல்ட் காரின் விற்பனைக்கும், உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் டாடா விஸ்டா விற்பனை நிறுத்தப்பட உள்ளது. டாடா விஸ்டாவை தவிர்ப்பது நலம்.

 04. டாடா மான்ஸா

04. டாடா மான்ஸா

விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவில்லை என்பதால், மான்ஸா விற்பனையும் விரைவில் நிறுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா ஸெஸ்ட் காருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருப்பதும் டாடா மான்ஸாவை கைவிட டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது.

 05. டாடா இண்டிகோ சிஎஸ்

05. டாடா இண்டிகோ சிஎஸ்

இந்தியாவின் முதல் காம்பேக்ட் செடான் கார் என்ற பெருமைக்குரிய டாடா இண்டிகோ சிஎஸ் காரும் இந்த ஆண்டு விடைபெறும் பட்டியலில் உள்ளது. இதற்கு மாற்றாக, தற்போது சோதனையில் இருந்து வரும் டாடா கைட் காம்பேக்ட் செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 06. டாடா மோவஸ்

06. டாடா மோவஸ்

டாடா மோவஸ் காரின் விற்பனை மிக மோசமாக இருந்து வருவதால், இந்த காருக்கு விடைகொடுக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. மிக மோசமான டிசைனுக்கு உதாரணமாக இருந்து வரும் இந்த கார் வர்த்தக மார்க்கெட்டில் மட்டும் சிறிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, ஊரக மார்க்கெட்டில் இந்த காரை தனிநபர் பயன்பாட்டுக்கு வாங்குகின்றனர். அதுபோன்று, இந்த காரை வாங்க எண்ணுபவர்கள் இனி தவிர்ப்பது நலம்.

 07. மாருதி ரிட்ஸ்

07. மாருதி ரிட்ஸ்

கணிசமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் கொடுத்தும் பார்த்தும் ரிட்ஸ் காரின் விற்பனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, இந்த ஆண்டு ரிட்ஸ் காருக்கு மாருதி விடைகொடுக்க முடிவு செய்திருக்கிறது. மேலும், புதிதாக வரும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டவுடன் இந்த காரை தனது போர்ட்போலியோவில் இருந்து நீக்குவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மாருதி ரிட்ஸ் காரும் இப்போதைய நிலையில் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

 
English summary
You Should Avoid To Buy These 6 Cars in India This Year.
Story first published: Saturday, April 18, 2015, 10:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark